Instagram longer stories : இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு குட் நியூஸ் - அசத்தல் அம்சங்களுடன் வருகிறது புது அப்டேட்
இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாகவும், விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் செயலி, உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்டதாகும். உலகின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாகவும் இன்ஸ்டாகிராம் உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர் அதில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பயனர்களை குஷிப்படுத்தும் வகையில் விரைவில் புதிய மாற்றத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இன்ஸ்டாகிராமில் போடப்படும் ஸ்டோரிகள் தற்போது 15 விநாடிகள் டைம் லிமிட்டில் உள்ளன. இதனால் பெரிய வீடியோக்களை பதிவிட முடியாத சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில், அந்த டைம் லிமிட்டை 1 நிமிடமாக உயர்த்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய அப்டேட் தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாகவும், விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.