Asianet News TamilAsianet News Tamil

Instagram : யூஸ் பண்ணது போதும் ரெஸ்ட் எடுங்க.... பயனர்களின் நலன் கருது புது அப்டேட் வெளியிட்ட இன்ஸ்டாகிராம்

முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராமின் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

Instagram introduces the Take a Break feature
Author
Tamil Nadu, First Published Dec 8, 2021, 10:09 PM IST

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டாகிராம் செயலி, உலகம் முழுவதும் பல கோடி பயனர்களை கொண்டதாகும். உலகின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு செயலியாகவும் இன்ஸ்டாகிராம் உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர் அதில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் 'டேக் ஏ பிரேக்' (Take a Break) என்கிற புதுஅம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியாக அதிக நேரம் இந்த செயலியை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இடையிடையே சிறிது நேரம் மற்ற பணிகளை செய்ய நினைவூட்டும் வகையில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

Instagram introduces the Take a Break feature

10, 20 அல்லது 30 நிமிடங்கள் என பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. செட்டிங்ஸ் மூலம் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும். 

இந்த அம்சத்தை  முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற நாடுகளிலும் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios