உலக அளவில் பலரும் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் தற்போது முடங்கி உள்ளதாக பொதுமக்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் செயலி இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாவில் உள்ள ரீல்ஸ்களுக்கு அனைவரும் ரசிகர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் தற்போது முடங்கி உள்ளது. 

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் முன்னர் ட்விட்டராக இருந்த தற்போதுள்ள எக்ஸ் தளத்தில் இன்ஸ்டாகிராம் முடங்கி உள்ளதாக புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். பயனர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்களைப் பார்க்க முடியவில்லை. கார்களின் படங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளைக் காட்டும் ஃபீட் பக்கம் மட்டுமே தெரிகிறது என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் தற்போது முழுவதும் முடங்கி இருக்கிறது. இது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மொபைல் வாடிக்கையாளர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் முடக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

ரூ.12 ஆயிரம் போன் இப்போ 7500 ரூபாய் தான்.. 50 MP கேமரா.. 6.74 இன்ச் HD+ டிஸ்பிளே.. இன்னும் பல வசதி இருக்கு!