இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி என அழைக்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி மாடலில் 6.78 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி மாடலில் 8GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சீரான 5ஜி சேவையை உறுதிப்படுத்தும் வகையில் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 5ஜி பரிசோதனைகளை இன்ஃபினிக்ஸ் மேற்கொண்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ஜீரோ 5ஜி மாடலில் 48MP பிரைமரி கேமரா, 13MP டெலிபோட்டோ கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி அம்சங்கள்

- 6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 6nm பிராசஸர்
- மாலி-G68 MC4 GPU
- 8GB LPDDR5 ரேம்
- 128GB (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 10
- டூயல் சிம்
- 48MP பிரைமரி கேமரா
- 13MP டெலிபோட்டோ கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 16MP செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், DTS சரவுண்ட் சவுண்ட்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி 
- 5000mAh பேட்டரி
- 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் ஸ்கைலைட் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்குகிறது.