இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 80Hz ரிப்ரெஷ் ரேட், 8MP செல்பி கேமரா, யுனிசாக் T610 பிராசஸர், 4GB ரேம், 3GB விர்ச்சுவல் ரேம், 13MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 6000mAh பேட்டரி, 10W சார்ஜிங் வழங்கப்பட்ட உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்பின்க்ஸ் ஹாட் 12 பிளே அம்சங்கள்:

- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன்
- பாண்டா MN228 கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டா கோர் 12nm UNISOC T610 பிராசஸர்
- மாலி-G52 GPU
- 4GB LPDDR4x ரேம்
- 64GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் XOS 10
- 13MP பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்.இ.டி. பிளாஷ்
- டெப்த் சென்சார்
- 8MP செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்.இ.டி. பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், DTS ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000mAh பேட்டரி
- 10W சார்ஜிங்

விலை விவரங்கள்:

இன்பினிக்ஸ் ஹாட் 12 பிளே ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக், ஹாரிசான் புளூ, ஷேம்பெயின் கோல்டு மற்றும் டேலைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 30 ஆம் தேதி துவங்க இருக்கிறது.