இந்தியர்கள் தினமும் சுமார் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் மட்டும் செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வரையில் ஸ்மார்ட்போனிலேயே இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன
AppAnnie எனப்படும் Data.ai தளத்தில் ‘ஸ்டேட் ஆஃப் மொபைல் 2023’ என்ற பெயரில் ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியர்கள் தங்களது பொன்னான நேரத்தை பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் கழிப்பதாகவும், குறிப்பாக சமூகவலைதளங்கள், வீடியோக்களில் மூழ்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 4.9 மணி நேரம் இந்தியர்கள் ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்கள், இது 8 வது இடத்தில் உள்ளது, அதாவது அதிக நேரம் ஸ்மார்ட்போன்களில் நேரத்தை செலவிடும் நாடுகளின் வரிசையில் உள்ளது. இந்தோனேசியா போன்ற பிற நாடுகள், மாகாணங்களில் சுமார் 5.8 மணி நேரம் ஸ்மார்ட்போனில் பொழுதை கழிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் செலவழித்த மொத்த நேரத்தைப் பற்றி பேசுகையில், இந்தியர்கள் சுமார் 0.75 டிரில்லியன் மணிநேரம் பயன்படுத்தியுள்ளனர், அதே நேரத்தில் சீனா 2022 ஆம் ஆண்டில் 1.1 டிரில்லியன் மணிநேரத்தைப் பதிவு செய்துள்ளது.
2022 ஆண்டில் இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்:
இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் மொத்த எண்ணிக்கை 29 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தையாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால், ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வளர்ச்சியில் இந்தியா மிகவிரைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பதிவிறக்கங்கள் செய்யப்பட்ட நேரம்:
2022 ஆண்டில் உலகம் முழுவதும் டவுன்லோட் செய்யப்பட்டதன் நேரம் அதிகரித்தாலும். டேட்டா.ஐ அறிக்கையின்படி, உலகம் முழுவதும் உள்ள ஆப் ஸ்டோர்களில் பதிவிறக்கம் ஆன நேரம் குறைந்துள்ளது. 2% குறைந்து $167 பில்லியனாக உள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் கேமிங்கின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இது தொடர்பாக Data.ai இன் இன்சைட்ஸின் தலைவரான Lexi Sydow கூறுகையில், “மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், தங்கள் பணத்தை எங்கு செலவிடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வீடியோ ஸ்ட்ரீமிங், டேட்டிங், ஷார்ட் ஃபார்ம் வீடியோ மற்றும் டிராவல் ஆகியவற்றுக்கு டாலர் கணக்கில் செலவு செய்வது வருவதும், கேமிங் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 5% குறைந்து $110 பில்லியனாக இருப்பதையும் நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.
2023க்கான எதிர்பார்ப்புகள்
2023ஆம் ஆண்டில் மொபைலுக்கான உலகளாவிய விளம்பரச் செலவு 362 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கூறப்படுகிறது. உலகளவில் யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற வீடியோ தளங்களால் இந்த ஆண்டு இருக்கும்.