இந்த 2022 ஆண்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய Smart Watch துறை! மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!!

இந்த 2022 ஆண்டில் ஸ்மார்ட் வாட்ச் துறையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் ஸ்மார்ட் வாட்ச் பயனர்களின் எண்ணிக்கை அதிகளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indian smartwatch market is witnessing a boom in 2022

இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. நவம்பர் மாதம் கவுண்டர்பாயின்ட் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்வாட்ச் பயனர்கள் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இத்தகைய விரைவான வளர்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் முக்கியமான ஒரு காரணம் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்களின் விலை ரூ. 10,000க்கு மேல் இருந்தது, மேலும் பயனர்கள் மலிவு விலையில் ஸ்மார்ட் பேண்டுகள் அல்லது ஃபிட்னஸ் டிராக்கர்களை வாங்க வேண்டியிருந்தது. ஆனால், அதன்பிறகு நொய்ஸ் மற்றும் ஃபயர்-போல்ட் போன்ற பிராண்டுகள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. அதே போல், Xiaomi மற்றும் OnePlus போன்ற பிரபல பிராண்டுகள் தங்கள் உத்தியை மாற்றியமைத்து ரூ. 5,000க்குள் தங்கள் சொந்த ஸ்மார்ட் வாட்ச்களை வெளியிட்டன. 

நடைமுறையைில் ரூ. 5,000க்கு குறைவான ஸ்மார்ட்வாட்ச்கள் அம்சம் நிறைந்தவையாக உள்ளன. நீர்த்துளியில் இருந்து பாதுகாப்பு இருப்பதால், மக்கள் மத்தியில் ஸ்மார்ட்வாட்ச்சுக்கு நல்ல வரவேற்பு .ள்ளது. மேலும், அத்தகைய பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்சுகளானது  ஆப்பிள் வாட்ச் அல்லது கேலக்ஸி வாட்ச் சீரிஸ் போல் பிரீமியம் தோற்றத்தில் வருகின்றன. 

WhatsApp Update: இனி யாரும் உங்க வாட்ஸ்அப்பை பார்க்க முடியாது!

இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்கள் உடல்நலம் சார்ந்த விவரங்களை தவறாக தான் வழங்குகின்றன, இருப்பினும் பயனர்கள் அதை குறிப்புக்காக மட்டுமே எடுக்க வேண்டும் என்று முன்னதாகவே ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்கள் அறிவித்து விடுகின்றன. 

பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்கள் உடற்பயிற்சி செய்யும் பயன்முறையைத் தானாகக் கண்டறிய முடியாது, மேலும் ஆப்பிள் வாட்ச்கள், ஃபிட்பிட்கள் மற்றும் கார்மின் ஸ்மார்ட்வாட்ச்கள் ஆகியவற்றைப் போல உடல்நலம் அளவீடு விவர பகுப்பாய்வுகள் கிடைக்காது.

அதே நேரத்தில், பட்ஜெட் கடிகாரங்கள் உங்கள் தினசரி உற்பத்தித்திறனை மேம்படுத்தக்கூடிய அம்சங்களை வழங்குகின்றன. உதாரணமாக, பயனர்கள் தூக்க பழக்கத்தை கண்காணிக்க முடியும், மேலும் சிலர் ப்ளூடூத் வழியாக வாட்ச்சில் அழைப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கின்றனர். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் கழிப்பதை எச்சரிக்கை செய்யும் வகையிலான அம்சமும் உள்ளன. இதனால் இந்த 2022 ஆண்டில் ஸ்மார்ட் வாட்ச் துறையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் ஸ்மார்ட் வாட்ச் பயனர்களின் எண்ணிக்கை அதிகளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios