Asianet News TamilAsianet News Tamil

67 ஆபாச இணையதளங்கள் முடக்கம், இதனால் என்ன பலன்?

இந்தியாவில் மேலும் 67 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆபாச தளங்கள் முடக்கப்பட்டாலும், குறுக்கு வழியில் ஆபாச தளங்கள் செயல்படுவதால், அரசின் நடவடிக்கையில் தீவிரம் தேவைப்படுவதாக கருத்துகள் வந்துள்ளன. 

Indian Government banned 67 more porn websites, here is the full list
Author
First Published Sep 30, 2022, 4:15 PM IST

இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 800க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் அதிரடியாக முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 67 இணையதளங்கள் முடக்கப்படுகின்றன. இது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் தரப்பில், இணையதள சேவை வழங்குநருக்கு (Internet Service Provider) அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி, 60க்கும் மேற்பட்ட இணையதளங்களை பட்டியலை குறிப்பிட்டு, அவற்றை முடக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 சட்டத்தை மீறியதால், உயர்நீதிமன்றங்களின் ஆணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! அதிகம் மெசேஜ் செய்பவரா நீங்கள்.. உங்களுக்கான அசத்தலான டிப்ஸ்

கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பின்படி 4 இணையதளங்களும், புனே நீதிமன்றத்தின் ஆணைப்படி 63 இணையதளங்களும் என மொத்தம் 67 இணையதளங்கள் முடக்கப்படுகின்றன. 

இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதற்கு ஏற்றவாறு இணையதளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், VPN போன்ற பல மென்பொருள்கள், ஆன்லைன் கருவிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன். இவற்றில் சில நல்ல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டாலும், இதை தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இனி Facebook, இன்ஸ்டா அனைத்தும் ஒரே கிளிக்கில் இயக்கலாம், Meta நிறுவனத்தின் அசத்தலான அம்சம்!

மேலும், இணையதளங்கள் முடக்கப்பட்டாலும், சமூக வலைதளங்களில் உள்ள கட்டுப்பாடுகள் போதுமான அளவில் இல்லை. இதனால் பிரபல சமூக வலைதளங்கள் உட்பட, பல செயலிகள் மூலமாக ஆபாச படம் பார்த்தலும், பகிர்தலும் அதிகரித்துள்ளது. 

தமிழ் ராக்கர்ஸ் போன்ற சட்ட விரோத இணையதளங்களை இன்று வரையில் முடக்க முடியாமல் உள்ளனர். இதற்கு முக்கிய காரணமே அரசு தரப்பில், தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாதது தான். போதுமான ஊதியத்துடன் அளவுக்கு அதிகமான தொழில்நுட்ப உருவாக்குநர்களை பணியில் அமர்த்தினால் மட்டுமே ஆன்லைன் மோசடி உள்ளிட்ட செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios