இருப்பதே தெரியலையே! உலகின் சிறிய ஏர் பியூரிஃபையர் உருவாக்கி அசத்திய ஐ.ஐ.டி. டெல்லி ஸ்டார்ட் அப்
ஐ.ஐ.டி. டெல்லி ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று உலகின் மிக சிறிய அணியக்கூடிய ஏர் பியூரிஃபையரை அறிமுகம் செய்து அசத்தி இருக்கிறது.
ஐ.ஐ.டி. டெல்லி ஸ்டார்ட் அப் நிறுவனம் உலகின் சிறிய ஏர் பியூரிஃபையரை உருவாக்கி அசத்தி இருக்கிறது. மேலும் இது வழக்கமான என்95 முகக்கவசத்தை விட சிறப்பானது ஆகும். நானோகிளீன் குளோபல் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய நசோ95 என்95 தர நேசல் ஃபில்ட்டர் உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இது பயனர்களின் மூக்கு துளையினுள் ஒட்டிக் கொண்டு கிறுமிகள் நுழையவிடாமல் தடுக்கிறது.
இந்த அணியக்கூடிய ஏர் பியூரிஃபையர் நான்கு விதமான அளவுகளில் கிடைக்கிறது. இந்த ஏர் பியூரிஃபையரை இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல்வேறு பரிசோதனைகளை எதிர்கொண்டு சான்றுகளை பெற்று இருக்கிறது. இதனை குழந்தைகளும் பயன்படுத்தி காற்று மூலம் பரவும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
இது தலைசிறந்த சாதனம் ஆகும். இது அனைத்து வயதினரும் பயன்படுத்தக்கூடியது. இது சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என தொழில்நுட்ப வளர்ச்சி குழுவின் செயலாளர் ராஜேஷ் குமார் பதக் தெரிவித்தார். இந்த ஏர் பியூரிஃபையரை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஊக்குவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
"வைரஸ்களை விட காற்று மாசு மிக பெரிய பிரச்சினை ஆகும். நுரையீரல் புற்றுநோய் இன்றும் மிகவும் அச்சுறுத்தி வருகிறது. நசோ95 போன்ற சாதனம் சுவாசம் சார்ந்த குறைபாடுகளை எதிர்கொள்ள மிக சிறப்பான ஒன்றாக இருக்கும். பொருந்தொற்று காலக்கட்டத்தில் இந்த சாதனம் பல இடங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமான நிலையங்கள், பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் நிலையில், இந்த ஏர் பியூரிஃபையர் முகக்கவசத்தை கழற்ற வேண்டிய அவசியத்தை போக்குகிறது," என முன்னாள் ஏய்ம்ஸ் இயக்குனர் எம்.சி. மிஷ்ரா தெரிவித்தார்.