Instagram-ல் தேவையில்லாதவற்றை தடுப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம் செயலியில் தேவையில்லாத வார்த்தைகள், பதிவுகளை தடுக்கும் புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தும் முறைகளை இங்குக் காணலாம்.
 

How to use Hidden Words feature in Instagram to block abusive comments

Instagram செயலியில் பல அம்சங்கள் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது Hidden Words ஆப்ஷன் ஆகும். இது எதிர்மறையான, புண்படுத்தும் மெசேஜ்களைத் தடுக்கிறது. இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்குக் காணலாம்.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் அண்மையில் Hidden Words அம்சத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் நீங்கள் பார்க்கும் பதிவுகள், மெசேஜ்களில் தேவையில்லாத, உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள் இருந்தால், அந்த பதிவுகளையும், மெசேஜ்களையும் தடுத்து விடும். இதை ஆன் செய்வதற்கு, நீங்கள் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றினாலே போதும்.

படி 1: Instagram செயலியைத்  திறக்கவும்.
படி 2: உங்கள் ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யவும்.
படி 3: மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று கிடைமட்ட வரி மெனுவை கிளிக் செய்யவும்.
படி 4: அமைப்புகள் பகுதிக்குச் செல்லவும்.
படி 5: பிரைவசி எனப்படும் தனியுரிமை மெனுவைத் தேர்வு செய்யவும்
படி 6: Hidden Words என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
படி 7: இப்போது அதில் புண்படுத்தும் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். 

ஒரே மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் Airtel 5G சேவைக்கு மாறினர்!

அதில் கருத்துகளை மறை, மேம்பட்ட கருத்து வடிகட்டுதல் மற்றும் செய்தி கோரிக்கை ஆப்ஷன்களை மறை ஆகியவற்றைப் பார்த்து, உங்களுக்குத் தேவையில்லாத வார்த்தைகளை எண்டர் செய்து, சேவ்  செய்தால் போதும். இனி உங்களுக்கு பிடிக்காத வார்த்தைகள், உங்கள் மனதை காயப்படுத்தும் பதிவுகள் எதுவும் உங்களுக்கு வராது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios