Asianet News TamilAsianet News Tamil

ஒரே நிமிடத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கலாம்!

 இந்திய தேர்தல் ஆணையமானது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும்படி மக்களை வலியுறுத்துகிறது. அதற்கான படிப்படியான செயல்முறை இங்கே காணலாம்.

How to Link Aadhaar card with Voter ID through Voter Portal
Author
First Published Dec 4, 2022, 6:42 PM IST

கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்), 2021 ஏற்கப்பட்டது. அதன்படி, அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வலியுறுத்தி வருகிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரிபார்த்தல், வாக்காளர்களின் அடையாளத்தை அங்கீகரித்தலுக்கு இந்த இணைப்பு முறை பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவுசெய்துள்ளா அல்லது பல தொகுதிகளில் பதிவு செய்துள்ளார்களா என்பதைச் சரிபார்க்க முடியும்.

வாக்காளர் அடையாளம் அல்லது தேர்தல் புகைப்பட அடையாள அட்டையுடன் (EPIC) ஆதார் எண்னை இணைப்பதற்கு இன்னும் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்தவில்லை. ஆதார் எண் வழங்கப்படாத பட்சத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து தற்போதுள்ள எந்த ஒரு வாக்காளர் பெயரும் நீக்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இப்போது, ​​உங்கள் ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆன்லைனில் இணைக்க விரும்பினால், தேர்தல் ஆணையம் சில எளிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளது. அதன்படி, உங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள எண்னை இணைப்பதற்கான படிகளை இங்கு காணலாம்.

‘இந்த இடங்களில் 5ஜி டவர் வைக்க வேண்டாம்’ Airtel, Jio நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனம் அட்வைஸ்

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண் இணைப்பது எப்படி?

படி 1: கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியைப் பதிவிறக்கவும்.

படி 2: செயலியைத் திறந்து 'நான் ஒப்புக்கொள்கிறேன்' விருப்பத்தை கிளிக் செய்து 'அடுத்து' என்பதைத் தட்டவும்.

படி 3: முதல் விருப்பமான 'வாக்காளர் பதிவு' என்பதைத் தட்டவும்.

படி 4: தேர்தல் அங்கீகாரப் படிவத்தை (படிவம் 6B) கிளிக் செய்து திறக்கவும்.

படி 5: 'Lets Start' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 6: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட உங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP அனுப்பு என்பதைத் தட்டவும்.

படி 7: நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு 'சரிபார்' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 8: Yes I Have Voter ID என்பதைக் கிளிக் செய்து, 'அடுத்து' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 9: உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (EPIC) உள்ளிட்டு, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, 'விவரங்களைப் பெறு' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 10: 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 11: ஆதார் எண், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் உங்கள் அங்கீகார இடத்தை நிரப்பி 'முடிந்தது' என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 12: படிவம் 6B மாதிரிக்காட்சி பக்கம் திறக்கும். உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, உங்கள் படிவம் 6B இன் இறுதிச் சமர்ப்பிப்பிற்கு 'உறுதிப்படுத்து' என்பதைக் கிளிக் செய்யவும்
 

Follow Us:
Download App:
  • android
  • ios