Asianet News TamilAsianet News Tamil

Instagram இல் உங்களை அன் ஃபாலோ செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டுமா?

இன்ஸ்டாகிராமில் உங்களை எத்தனை பேர் அன் ஃபாலோ செய்துள்ளார்கள், அவர்கள் பெயர்கள் என்ன என்பது குறித்து நீங்களே சுலபமாக கண்டறியலாம்.

how to check unfollowed person on Instagram here the tricks you should know
Author
First Published Oct 27, 2022, 8:39 PM IST

பேஸ்புக் , இன்ஸ்டா ஆகிய இரண்டிலுமே நண்பர்கள் பட்டாளத்தை அதிகப்படுத்துவது என்பது இயல்பான ஒன்று. இன்ஸ்டாவில் ஒருவர் மற்றொருவரை ஃபாலோ செய்து கொள்ளும் அம்சம் உள்ளது. அதே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமலே அன் ஃபாலோவும் செய்ய முடியும்.

அவ்வாறு இன்ஸ்டாவில் உங்களை அன் ஃபாலோ செய்தவர்கள் யார் என்பது குறித்து நீங்கள் சுலபமாக கண்டுபிடிக்கலாம். இதை கண்டுபிடிப்பதற்கென பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் எக்கச்சக்கமான ஆப்கள் உள்ளன. அதில் பயன்படுத்த சுலபமான ஒன்றான ஃபாலோ மீட்டர். 

ஃபாலோ மீட்டரை ( Follow Meter ) செயலியைப் பயன்படுத்தி உங்களை அன் ஃபாலோ செய்தவர்களை எவ்வாறு கண்டறிவது ?

உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனத்தில் ஃபாலோ மீட்டரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு  உங்கள் ஃபாலோ மீட்டரில் இன்ஸ்டாகிராம் மூலம் லாகின் செய்யுங்கள். 

இனி இந்த தளத்தில் Google Chrome வராது! உடனே என்னனு பாருங்க!!
நீங்கள் லாகின் செய்தவுடன் , ஃபாலோ மீட்டரின் மெயின் பக்கம் தோன்றும் . அங்கே உங்களை ஃபாலோ செய்தவர்களை கையாளுவதற்கான எக்கச்சக்கமான ஆப்ஷன்கள் இருக்கும்.

பொதுவாக இதில் உங்களை அன் ஃபாலோ செய்தவர்களை நீங்கள் அன் ஃபாலோ ஆப்ஷனை வைத்து கண்டறிய முடியும். ஆனால் நீங்கள் புதிய பயனராக இருந்தால் உங்களை அன் ஃபாலோ செய்தவர்களை கண்டறிய  ‘நாட் ஃபாலோயிங் பேக்’ ( Not following back ) என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.

ஒரு வேளை  நீங்கள் மூன்றாம் தரப்பு செயலியைப் பயன்படுத்துவதற்கு விரும்பவில்லை என்றால் அதற்கும் ஒருவழி இருக்கிறது. உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ios சாதனத்தில்  இன்ஸ்டாகிராம் ஆப்பை ஓப்பன் செய்யுங்கள். உங்கள் ஸ்க்ரீனின் கீழ் வலது மூலையில் உள்ள ஐகானைப் பயன்படுத்தி உங்கள் ப்ரொபைல் பக்கத்திற்கு செல்லுங்கள்.

WhatsApp Auto Reply: அடேங்கப்பா வாட்ஸ்அப்பில் இப்படியெல்லாமா கூட பண்ணலாம்?

அதற்கு மேலே உள்ள ஃபாலோவர்ஸ் ( Followers ) ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் உங்களை ஃபாலோ செய்பவர்களின் பட்டியல் தோன்றும். பின் ‘சர்ச் பாரில்’ உங்களை அன் ஃபாலோ செய்திருப்பார்களோ என்று நீங்கள் நினைக்கும் நபரின் பெயரை உள்ளிடவும். அவர்களது பெயர் அதில் இடம்பெறவில்லை என்றால் அவர்கள் உங்களை அன் ஃபாலோ செய்துள்ளார்கள் என்பதை  நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios