எந்த ரயில் எப்பொழுது வரும்? “ஹிந்து ரயில்” செயலி மட்டும் போதும்..!

hindu rail apps introduced
hindu rail-apps-introduced


“டிஜிட்டல் இந்தியா” என்ற வார்த்தைக்கு பொருள் நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கருப்பு பண  ஒழிப்பு நடவடிக்கையாக உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்க தொடங்கியது.

அதற்காக மத்திய அரசு சார்பாக பீம் என்ற செயலியையும் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து, இந்த செயலியின் மூலம் பண  பரிவர்த்தனை செய்வதற்கும், மற்ற விவரங்களை தெரிந்துக் கொள்வதற்கு இந்த செயலி பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பல செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,ரயில் தொடர்பான  அனைத்து விவரத்தையும் தெரிந்துக்கொள்வதற்கு, ஹிந்து ரயில் என்ற ஒரு புதிய செயலியை உருவாக்கப்பட்டுள்ளது.

ரயில்தொடர்பாக உருவாக்கப்பட்ட அனைத்து செயலிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை பெரும்  ஒரு சிறப்பு செயலியாக உருவாகப்பட்டுள்ளது .

இந்த செயலி மூலம், ரயில் எந்த மேடையிலிருந்து கிளம்புகிறது, எப்பொழுது வந்து சேரும், இருக்கை வசதி, ரயில் தாமதம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த செயலி மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த செயலியானது வரும் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios