hereafter we can book the cylinder thro wats aap
அத்தியாவசிய பொருட்களில் ஒன்று காஸ் சிலிண்டர். ஒரு முறை காஸ் தீர்ந்து விட்டால் அதனை புக் செய்வதற்கு கால் செய்ய வேண்டும் அல்லது மெசேஜ் மூலம் பதிவு செய்யா வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள ஒன்று.
இந்நிலையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப , பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது, இனி காஸ் சிலின்டர் பதிவு செய்ய வாட்ஸ் ஆப் ஒன்றே போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .
இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் மூலம் காஸ் சிலிண்டரை புக் செய்யும் வசதி, முதலில் உத்திர பிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்படும் எனவும், பின்னர் படிப்படியாக மற்ற மாநிலங்களில் அமல் படுத்தப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வந்துவிட்டால், உண்மையில் மக்களுக்கு மிகவும் எளிதாக அமையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது .
