தொழிலதிபரை சிப்ஸ் கொடுத்து ஏமாற்றிய ஸ்டெஃப் மிஸ்! ரூ.95 லட்சத்தை அபேஸ் செய்த விர்சுவல் தோழி!
ஏமாந்துபோய் நின்ற பராக் தேசாய் அலறி அடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷடனை நோக்கி ஓடியிருக்கிறார். காவல்துறையினரிடம் நடந்ததை எல்லாம் கூறி முட்டாள்தனமாக பேஸ்புக்கில் பேசிய பெண்ணின் பேச்சைக் கேட்டு பணத்தை இழந்த கதையைக் கூறி புகார் கொடுத்திருக்கிறார்.
ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், குஜாராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பேஸ்புக்கில் பழகிய பெண்ணை நம்பி ரூ.95 லட்சம் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அழகாபுரியைச் சேர்ந்தவர் பராக் தேசாய். இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஸ்டெஃப் மிஸ் என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் பழகத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மூலிகை பொருட்களை வாங்கி தான் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யுமாறு ஐடியா கொடுத்திருக்கிறார்.
அதன்படி ஸ்டெஃப் மிஸ் அறிமுகப்படுத்திய டாக்டர். விரேந்திரா என்பவரை பராக் தேசாய் இ-மெயில் மூலம் தொடர்புகொண்டுள்ளார். ஸ்டெஃப்புடன் பேசியபடி, ரூ.1 லட்சம் பணத்தை விரேந்திராவிடம் கொடுத்துவிட்டு மாதிரி மூலிகை பொருட்களின் பாக்கெட் ஒன்றை பெற்றுள்ளார் தேசாய்.
ஆர்டர் செய்திருந்த மருந்துப் பொருட்களின் பார்சல் அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், தேசாய் பார்சலையே பிரிக்காமல், மேலும் ஆர்டர்கள் கொடுத்துள்ளார். இப்படியே பலமுறை ஆர்டர் செய்து பணமும் அனுப்பி வந்திருக்கிறார். பிறகுதான் இதில் தனக்கு என்ன லாபம் என்று யோசித்து வீரேந்திராவிடம் கேட்டிருக்கிறார்.
மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்! ஒரே மாதத்தில் 3வது முறை!
விரேந்திராவிடம் இருந்து மழுப்பலான பதில் வந்ததால் சந்தேகம் அடைந்த தேசாய், உடனடியாக தன்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுத்த பணத்தை முழுவதும் திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், திருட்டு ஆசாமியான விரேந்திராவை அதற்குப் பின் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதைப்பற்றி பேஸ்புக்கில் ஸ்டெஃப் மிஸ்ஸிடம் சொல்ல முயற்சி செய்தால், அந்த் பெண்ணையும் பேஸ்புக்கில் காணவில்லை. இவ்வளவு நடந்த பிறகுதான் பராக் தேசாய் தனக்கு வந்த பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளார். அதற்குள் மூலிகை பொருட்கள் ஏதும் இல்லை. சிப்ஸ் பாக்கெட்டுகளும் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொடி வகைகளும்தான் இருந்தன.
ஏமாந்துபோய் நின்ற பராக் தேசாய் அலறி அடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷடனை நோக்கி ஓடியிருக்கிறார். காவல்துறையினரிடம் நடந்ததை எல்லாம் கூறி முட்டாள்தனமாக பேஸ்புக்கில் பேசிய பெண்ணின் பேச்சைக் கேட்டு பணத்தை இழந்த கதையைக் கூறி புகார் கொடுத்திருக்கிறார். இப்போது போலீசார் விரேந்திராவையும் ஸ்டெஃப் மிஸ் என்பவரையும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க அடையாளம் தெரியாத நபர்களை நம்பி பணம் அனுப்பவோ தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ கூடாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருலகிறார்கள்.
இப்பவே கண்ணைக் கட்டுதா? கோடையில் வெயிலில் இளைப்பாற பட்ஜெட் விலையில் சூப்பர் ஏசி!