அறிமுகமானது பேஸ்புக்கில் குரூப் காலிங் வசதி....!!! பேஸ்புக் வாசிகள் மகிழ்ச்சி......!!!
பேஸ்புக்கில் குரூப் காலிங் வசதி....!!! பேஸ்புக் வாசிகள் மகிழ்ச்சி......!!!
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் தற்போது , குரூப்பில் காலிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் பேஸ்புக் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை
இந்நிலையில் , குரூப் காலிங் பொறுத்தவரையில், ஏற்கனவே ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் போன்ற தளங்கள் இந்த வசதியை வழங்கி வந்தன .
இந்நிலையில், தற்போது, பேஸ்புக்கில் உள்ளவர்கள் நேரடியாக க்ரூப் சாட் ஆப்ஷன் சென்றால் அங்கு காலிங் செய்யக் கோரும் ஆப்ஷன் இருக்கும். அதனை பயன்படுத்தி குரூப்பில் கால் செய்ய முடியும்.
மேலும், இந்த குரூப் காலிங் வசதி உள்ளதை தெரிந்துக்கொள்ள, நோட்டிபிகேஷன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிபிடத்தக்கது.
தற்சமயம் வரை க்ரூப் ஆடியோ காலிங் அம்சம் மட்டும் பேஸ்புக் அறிவித்திருக்கிறது. தற்போது தான் குரூப் காலிங் வசதியை பேஸ்புக் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.