Asianet News TamilAsianet News Tamil

வாட்ஸ்அப் கால் மூலம் வரும் ஆபத்து! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை! நம்பரை பார்த்து சுதாரிச்சுக்கோங்க...

சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது குறித்து தொலைத்தொடர்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

Government warns mobile users about WhatsApp calls from these numbers, asks to report these dangerous calls sgb
Author
First Published Apr 7, 2024, 10:51 PM IST

தொலைத்தொடர்பு துறை பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் அழைப்புகள் மொபைல் பயனர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில், அது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முக்கிய எச்சரிக்கை அறிக்கையையை வெளியிட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் மொபைல் எண் துண்டிக்கப்படும் என்றும் அவர்களின் எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என்றும் மிரட்டுகின்றனர்.

குறிப்பாக +92-xxxxxxxxxx போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இந்த மோசடி அதிகமாக நடக்கிறது. இந்த மோசடி குறித்து தொலைத்தொடர்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

வெயிலில் வாடி வதங்கும் மக்களுக்கு குட் நியூஸ்... அடுத்த 6 நாட்களில் கோடை மழைக்கு வாய்ப்பு!

Government issues warning to mobile users for calls coming from these numbers sgb

மோசடி செய்பவர்கள் இந்த அழைப்புகள் மூலம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். தொலைத்தொடர்புத் துறை தனது சார்பாக இதுபோன்ற அழைப்புகளைச் செய்ய யாரையும் அங்கீகரிக்கவில்லை எனவும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் விளக்கியுள்ளது.

இதுபோன்ற போலியான போன் கால்கள் வரும்போது அவர்களிடம் எந்தத் தகவலையும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் தொலைத்தொடர்புத்துறை கொண்டுள்ளது.

இதுபோன்ற மோசடி அழைப்புகள் குறித்து சஞ்சார் சாத்தி (www.sancharsaathi.gov.in) இணையதளத்தின் மூலம் அதன் புகார் அளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தொலைத்தொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மொபைல் பயனர்கள் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிக்கு ஆளானால், சைபர் கிரைம் அவசர உதவி எண்ணான 1920 க்குத் தொடர்புகொண்டு உதவி பெறலாம். அல்லது www.cybercrime.gov.in மூலம் என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

யார் இந்த ஸ்ரீனிவாஸ் பாலியா? விப்ரோ சி.இ.ஓ. பதவியைப் பிடித்தவரின் பின்னணி என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios