கூகுள் நிறுவனம் புதிய டார்க் மோட் வழங்கும் பணிகளை துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். 

கூகுள் நிறுவனம் புதிய டார்க் மோட் வழங்க துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டார்க் மோட் பிட்ச் பிளாக் நிற பேக்கிரவுண்ட் கொண்டிருக்கிறது. புதிய நிறத்திற்கான குறியீடு (#000000) ஆகும். இது OLED மற்றும் AMOLED டிஸ்ப்ளேக்களில் மிக அழகாக காட்சியளிக்கும்.

டார்க் மோட் வழங்குவதற்கான அறிவிப்பை கூகுள் இம்மாத துவக்கத்தில் வெளியிட்டது. எனினும், இதன் வெளியீடு மிக சொற்ப அளவிலேயே நடைபெற்று வருகிறது. சிலருக்கு டார்க் மோட் வழங்கப்பட்டு பின் அது தானாகவே மறைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூகுள் வலைதளத்தின் ஹோம்-பேஜ் மாற்றப்படவில்லை எனினும் அது லைட்கிரே நிறத்தில் உள்ளது. குயிக் செட்டிங்ஸ் பக்கத்தில் புதிய டார்க் தீம் அருகில் பிளாக் தீம் என காணப்படுகிறது. இதன் காரணமாக பழைய டார்க் தீம் தற்போதும் நீக்கப்படாமல், விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது.

கூகுளில் டார்க் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி

- பிரவுசரில் Google.com வலைதளம் சென்று வலதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் கியர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- இனி குயிக் செட்டிங்ஸ் பேனலில், டார்க் மோட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்ததும், கூகுள் மற்றும் அதன் சேவைகள் அனைத்தும் டார்க் மோடிற்கு மாறி விடும்.

Scroll to load tweet…

புதிய டார்க் மோட் அம்சம் AMOLED மற்றும் OLED டிஸ்ப்ளே கொண்ட சாதனங்களின் பேட்டரி பேக்கப் நேரத்தை சேமிக்கும். இதன் மூலம் வழக்கத்தை விட அதிக நேரம் பேட்டரி பேக்கப் பெற முடியும்.