ஆண்ட்ராய்டு 13 தளத்தில் இவ்வளவு வசதிகளா!
கூகுள் நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்டு 13 QPR2 Beta 2 அப்டேட்டை சில பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வெளியிடத் தொடங்கியுள்ளது. அதன்படி, புதுவிதமான பல்வேறு வசதிகள் ஆண்ட்ராய்டு 13 தளத்தில் இருப்பதாக தெரிகிறது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு அம்சத்தை மெருகேற்றி வருகிறது. சாமானிய மக்களும் தொழில்நுட்ப உலகில் ஜாம்பவான்களாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் பல புதிய எளிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு 13 பீட்டாவை சோதிக்கிறது. கடந்த மாதம் Google Pixel Feature Drop அப்டேட், ஆண்ட்ராய்டு 13 QPR2 Beta 1 அபட்டேட் வழங்கியது.
இந்த நிலையில், தற்போது ஆண்டராய்டு 13 QPR2 பீட்டா 2 (காலாண்டு இயங்குதள வெளியீடு) அப்டேட்டை வெளியிட தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின்படி, ஆண்ட்ராய்டு தளத்தில் சில புதிய பயனுள்ள அம்சங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமாக eSIM கார்டு பயன்பாடு ஆகும். இனி ஸ்மார்ட்போனில் உள்ள சிம்கார்டை, இ-சிம் ஆக ஆண்ட்ராய்டு மூலமாகவே மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஈமோஜிகள்: யூனிகோட் 15 ஈமோஜிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
டாக் டிஃபென்டர்: பேட்டரி சார்ஜ் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லும் போது (அநேகமாக 80%), நீங்கள் பிக்சல் டேப்லெட்டை டாக் செய்யும் போது சார்ஜிங் நிறுத்தப்படும்.
Shortcuts (ஷார்ட் கட்டுகள்): இந்த அப்டேட்டின் ஒரு பகுதியாக, Settings > Display > Lock screen பகுதியில் ஷார்ட்கட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது லாக் ஸ்கிரீனில் சில ஷார்ட்கட்டுகளை உருவாக்குவதற்கு உதவுகிறது. இருப்பினும், பிக்சல் சாதனங்களுக்கான QPR2 பீட்டா 2 இல் இது இன்னும் தெரியவில்லை.
https://twitter.com/MishaalRahman/status/1612519685395734537?s=20&t=ZBtFvH9yvOdoPGjcGLtF3A
work profile folderல் உள்ள ஸ்கிரீன் ஷாட்கள்: உங்கள் work profile திறந்திருக்கும் ஆப்ஸின் ஸ்கிரீன்ஷாட்கள் தனிப்பட்ட சுயவிவரத்தில் இல்லாமல் work profileன் ஸ்கிரீன்ஷாட் கோப்புறையில் வைக்கப்படும்.
லாக் ஸ்கிரீனில் இருந்து கன்ட்ரோல் செய்யலாம்: உங்களிடம் உள்ள செயலிகளில் இந்த வசதி இருக்கும் பட்சத்தில், லாக் ஸ்கிரீனில் இருந்தே உங்கள் ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களைக் கன்ட்ரோல் செய்யலாம். இதற்கு நீங்கள் Settings > Display > Lock screen சென்று மாற்ற வேண்டும்.
ஸ்பேஷியல் ஆடியோ: பிக்சல் 7 இல் aoc_audio_stereo_spatializer எனப்படும் புதிய ஷேர் செய்யப்பட்ட லைப்ரரி சாதனத்தின் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழியாக ஸ்பேஷியல் ஆடியோவை இயக்கும்.
பகுதியளவு திரை ஷேர் செய்தல்: "பதிவு செய்யத் தொடங்கு" பொத்தானில் இருந்து "app selector" இடைமுகத்தை நீங்கள் கையாளலாம், அணுகலாம். பிக்சல் 4a, Pixel 4a 5G, Pixel 5, Pixel 5G, Pixel 6 (6, 6 Pro மற்றும் 6a) மற்றும் Pixel 7 தொடர்கள் ஆகியவை மேற்கண்ட இந்த அப்டேட்டுடன் இணக்கமான சாதனங்களாகும்