பயனர்களை உளவு பார்த்த சீன செயலிகள்! கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!!
குறிப்பிட்ட சில சீன செயலிகள் உளவு பார்ப்பதாக கருதப்பட்ட நிலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அவை நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக கூகுள் நிறுவனம் சமீபத்தில் Pinduoduo என்ற சீன இ-காமர்ஸ் செயலியை நிறுத்தி வைத்தது. அத்துடன் Pinduoduo உருவாக்கியுள்ள பல செயலிகளையும் தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுளின் ஆப் ஸ்டோர் தவிர பிற தளங்களில் உள்ள இந்த சீன இ-காமர்ஸ் செயலியின் பதிப்புகளில் ‘தீம்பொருள் சிக்கல்கள்’ இருப்பதை கண்டறியப்பட்டது, இதனையடுத்து அந்த செயலிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கூகுள் செய்தித் தொடர்பாளர் எட் பெர்னாண்டஸ் கூறுகையில். "கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாமல், பிற தளத்தில் உள்ள (ஆஃப்-ப்ளே) இந்த செயலியின் பதிப்புகள் தீம்பொருளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டவை, Google Play Protect மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன" தெரிவித்துள்ளார். ஆஃப்-ப்ளே ஆப்ஸ் என்பது Google Play Store இல் கிடைக்காத, ஆனால் APKகள் மூலம் பதிவிறக்கம் செய்யக்கூடியவை ஆகும்.
இந்தப் பயன்பாடுகளைப் பதிவிறக்கிய பயனர்கள் உடனடியாகத் தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து அவற்றை அகற்றுமாறு கூகுள் அறிவிப்புகளை அனுப்புகிறது. இந்த செயலிகள் பயனர்களின் தரவைக் கண்காணிப்பதாகக் கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட Pinduoduo தளத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "தற்போதைய பதிப்பு கூகுளின் கொள்கையுடன் இணங்கவில்லை, அதே சமயம் கூடுதல் விவரங்களைப் பகிரவில்லை என்பதால் Pinduoduo ஆப் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று காலை எங்களுக்குத் தெரிவித்துள்ளது. Google Play ஆல் இடைநிறுத்தப்பட்ட பல பயன்பாடுகள் உள்ளன" என்று கூறியுள்ளார்.
மற்றொரு செய்தியில், கூகுள் நிறுவனம் அதன் "அமைப்புகளை மேம்படுத்த" மற்றும் OpenAI இன் ChatGPT க்கு போட்டியாக கூகுளை உருவாக்கும் வகையில், பார்ட் என்ற தளத்தை உருவாக்கி வருகிறது. அதற்காக பொதுமக்களின் கருத்தை பெறுவதற்காக, பார்ட் (AI) சாட்போட்டுக்கான அணுகலை வழங்க வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. US மற்றும் UK இல் உள்ள பயனர்கள் Bardஐ அணுகலாம். bard.google.com தளத்தில் சென்று மேலும் விவரங்களைப் பார்க்கலாம். விரைவில் இது மற்ற பிராந்தியங்களிலும், பிற மொழிகளிலும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.