பிக்சல் 10 அறிமுகத்தால், கூகுள் பிக்சல் 9 ப்ரோ மீது பிளிப்கார்ட்டில் ரூ.23,000 வரை தள்ளுபடி. இந்த பிளாக்ஷிப் போனை குறைந்த விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு.

டெக் உலகின் ஜாம்பவானான கூகுள், தனது புதிய பிக்சல் 10 சீரிஸை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. புதிய மாடல் வந்தாலே பழைய மாடலின் விலை குறையும் என்ற விதிப்படி, கடந்த ஆண்டு (2024) ரூ.1,09,999 என்ற விலையில் அறிமுகமான பிக்சல் 9 ப்ரோ போனின் விலையை கூகுள் அதிரடியாக குறைத்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் தற்போது இந்த போனின் விலை ரூ.89,999 என பட்டியலிடப்பட்டுள்ளது. இது நேரடியான ரூ.20,000 தள்ளுபடியாகும்.

ரூ.23,000 வரை தள்ளுபடி: முழு சலுகை விவரங்கள்

பிளாட் தள்ளுபடியைத் தாண்டி, பிக்சல் 9 ப்ரோ வாங்க நினைப்பவர்கள் வங்கிச் சலுகையாக கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம், போனின் இறுதி விலை ரூ.86,999 ஆக குறைகிறது. மேலும், உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் இந்த போனை ரூ.55,850 என்ற குறைந்தபட்ச விலையிலும் வாங்க முடியும். இத்துடன் வட்டியில்லா மாதத் தவணை (No-cost EMI) வசதியும் வழங்கப்படுகிறது.

அம்சங்களின் அணிவகுப்பு: கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஸ்பெக்ஸ்

டிஸ்ப்ளே: 6.3-இன்ச் சூப்பர் ஆக்சுவா LTPO OLED டிஸ்ப்ளே, 1280 × 2856 பிக்சல்ஸ் மற்றும் 3000 நிட்ஸ் உச்ச பிரகாசம் கொண்டது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.

சிப்செட்: கூகுள் டென்சர் G4 (Google Tensor G4) பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: 16GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 15 OS.

பேட்டரி: 4700mAh பேட்டரி, 45W வயர்டு மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

பாதுகாப்பு: IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்புத் திறன் கொண்டது.

கேமராவில் கில்லி: மிரட்டலான கேமரா அமைப்பு

பிக்சல் 9 ப்ரோ போனில் கூகுள் மூன்று பின்புற கேமராக்களைக் கொடுத்துள்ளது:

• 50MP பிரைமரி சென்சார்

• 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ்

• 48MP டெலிஃபோட்டோ லென்ஸ்

துல்லியமான மற்றும் அழகான செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 42MP முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இப்போது வாங்குவது ஏன் சிறந்தது?

பிக்சல் 10 சீரிஸ் வந்துவிட்டதால், பிக்சல் 9 ப்ரோவின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனாலும், இதன் பிரீமியம் செயல்திறன், சக்திவாய்ந்த கேமராக்கள் மற்றும் பிளாக்ஷிப் அம்சங்கள் இன்றும் சிறப்பாகவே உள்ளன. குறைந்த விலையில் ஒரு உயர்ரக கூகுள் போனை வாங்க நினைப்பவர்களுக்கு, இந்த டீல் ஒரு பொன்னான வாய்ப்பு.