Clear Calling : இனி இரைச்சலே இல்லாமல் பேசலாம்! வந்துவிட்டது Android 13 சூப்பர் அப்டேட்!!
ஆண்ட்ராய்டு 13 தளத்தில் கிளியர் காலிங் (Clear Calling) என்ற அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி இரைச்சலே இல்லாமல், துல்லியமாக மற்றவர்கள் பேசுவதைக் கேட்க முடியும்.
பொதுவாக வாய்ஸ்காலில் HD Voice Call என்ற அம்சம் இருந்தாலும், எதிர்முனையில் இருப்பவர் பேசும் போது, அவர் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு இரைச்சலும் சேர்ந்தே கேட்கும். டிராபிக்கில் இருக்கும் போது வாகனங்கள், காற்று சத்தமும் கூடுதலாக கேட்கும்.
இத்தகைய குறைபாட்டை போக்கும் வகையில், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் நாய்ஸ் கேன்சலிங் போன்றதொரு அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு கிளியர் காலிங் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அம்சமானது பின்னால் இருக்கும் இரைச்சல்களை குறைத்து நம்முடைய செவிகளுக்கு பேசுபவரின் குரலை மட்டும் வழங்கும். அதே போல், நாம் போனில் பேசும் போதும்கூட, நம்முடைய குரலை இரைச்சலின்றி தெளிவாக கடத்துகிறது.
மேம்படுத்தப்பட்ட தனியுரிமைக் கட்டுப்பாடுகள், மொழி அமைப்புகள் மற்றும் பல புதிய அம்சங்களுடன் Android 13 வரவுள்ளது.Samsung Galaxy, ASUS, HMD (Nokia phones), iQOO, Motorola, OnePlus, OPPO, Realme, Sharp, Sony, Tecno, vivo, Xiaomi இன்னும் பல ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 13 வரும் என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிவரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு 13க்கான காலாண்டு இயங்குதள வெளியீடு (QPR1) பீட்டா இந்த மாதம் தொடங்குவதால், கூகுள் தனது பிக்சல் சாதனங்களுக்காக ஆண்ட்ராய்டு 14 பீட்டாவை ஏப்ரல் 2023 இல் வெளியிடத் தொடங்கும். ஆண்ட்ராய்டு 13 QPR பீட்டாக்கள் ஜூன் 2023 வரை இயங்கும் என்று கூகுள் முதலில் கூறியது. ஆனால் பீட்டா வெளியீடுகள் "மார்ச் 2023 வரை தொடர" திட்டமிடப்பட்டுள்ளது,
மொபைல் போன் வெடித்து பலியான பெண்.. இந்தியாவில் இதுதான் முதல் முறை - அதிர்ச்சி சம்பவம்!
மேலும் இரண்டு QPRகள் மட்டுமே இருக்கும்: T1B (டிசம்பரில் நிலையானது) மற்றும் T2B என்று 9to5Google தெரிவிக்கிறது. அதன்பிறகு, ஆண்ட்ராய்டு 14 பீட்டா வெளியீடுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.