ஃபேஸ்புக்கை மிஞ்சிய கூகுள்……!
ஃபேஸ்புக்கை மிஞ்சிய கூகுள்……!
பொதுவாக மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட வலைத்தள பட்டியலில் , கூகிள் முதலிடத்தை பிடிப்பது வழக்கம். அதன்படி கடந்த நவம்பர் மாதத்திற்கான பட்டியலில் ஃபேஸ்புக்கை வீழ்த்தி கூகுள் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வலைதள ஆய்வு நிறுவனமான similarweb.com வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வலைதளமாக முதலிடத்தில் கூகுளும், இரண்டாம் இடத்தில் ஃபேஸ்புக்கும் இடம் பிடித்துள்ளன.
கூகிள் முதலிடம், பிடிக்க காரணம் என்ன ?
மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அமோசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஒவ்வொரு வலைதளங்களிலும் உள்ள தள்ளுபடி மற்றும் சலுகைகளை ஒப்பிட்டு வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனாலேயே ஃபேஸ்புக்கை விட கூகுள் வலைத்தளம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதத்தின் மொத்த இணைய பயன்பாடுகளில் 8.5% பெற்று உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட வலைதலாமாக கூகுள் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் மட்டும் மொத்தமாக 30.56 பில்லியன் முறை கூகுள் பார்க்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் முதல் இடத்தில் இருந்த ஃபேஸ்புக் நவம்பரில் 7.1% பயன்பாட்டாளர்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 25.51 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கு அடுத்த படியாக அதிகம் பார்க்கப்பட்ட வலைதளங்களில் யூ-டியூப் மூன்றாவது இடத்திலும், யாஹூ நான்காவது இடத்திலும், விக்கிபீடியா ஐந்தாவது இடத்திலும் ட்விட்டர் ஆறாவது இடத்திலும் live.com ஏழாவது இடத்திலும் உள்ளன. கூகுளின் பிற வலைதலங்களான google.co.in, google.com.br, google.co.in போன்றவை கடைசி மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.