செப்டம்பர் 3, 2025 அன்று, உலகளவில் ChatGPT பயனர்கள் பெரிய செயலிழப்பை சந்தித்தனர். Chatbot செயல்பாடு, வரலாறு காணாமை மற்றும் பதில்கள் வராமை போன்ற பிரச்சனைகளை பயனர்கள் அறிவித்தனர்.

இன்று புதன்கிழமை (செப்டம்பர் 3, 2025) உலகளவில் சாட்ஜிபிடி (ChatGPT) பயனர்கள் பெரிய செயலிழப்பை சந்தித்தனர். இந்தியாவைச் சேர்த்து பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்கலை அறிவித்தனர். இதனால் சமூக ஊடகங்களில் #ChatGPTDown எனும் ஹாஸ்டேக் ட்ரெண்டாகியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆன்லைன் சேவை கண்காணிப்பு தளம் Downdetector, கடந்த 30 நிமிடங்களில் ஆயிரக்கணக்கான புகார்களைப் பதிவு செய்தது. அதிகமாக chatbot செயல்பாடு, வரலாறு காணாமை, மற்றும் பதில்கள் வராமல் இருப்பது குறித்த குறைகள் அதிகம் வந்துள்ளன.

இதுகுறித்த OpenAI வெளியிட்ட தகவலின்படி, இந்த சிக்கல் "முன்பக்க தடுமாற்றம்" என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ChatGPT-இன் அடிப்படை AI பாதிக்கப்படவில்லை. பதில்கள் பயனருக்கு எப்படி காட்டப்படுகின்றன என்பதில் தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. நெட், மொபைல், டெஸ்க்டாப் சாட் பதில்கள் பாதிக்கப்பட்டாலும், API மற்றும் பின்தள சேவைகள் இயல்பாகவே செயல்படுகின்றன.

கூகுள் ஜெமினி AI, “ChatGPT செயலிழப்புக்கான காரணம் frontend பிரச்சனை தான்” என துல்லியமாக விளக்கியது. மேலும் பயனர்கள் Gemini, Microsoft Copilot, Perplexity AI போன்ற மாற்றுகளை பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்தது.

வேலை, கல்வி, தனிப்பட்ட தேவைகளுக்காக ChatGPT-ஐ நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோர் தற்காலிகமாக பாதிக்கப்பட்டனர். பலரும் சமூக ஊடகங்களில் “என் வேலை நிற்கிறது”, “சமர்ப்பிக்க வேண்டிய பணி நிலுவையில் உள்ளது” போன்ற கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.