காதலர் தினத்துக்காக கூகுள் செய்த காரியம்!
காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் பிரத்யேகமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் காதலர் தினம் 2023 இன்று பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானிய துறவியான செயிண்ட் வாலண்டைன் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்பான கொண்டாட்டம், கண்டங்கள் மற்றும் சமூகங்களில் உள்ள மக்களை உள்ளடக்கிய காதல், பிற்காலத்தில் காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடத் தொடங்கினர்.
கூகுள் நிறுவனமும் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், கூகுள் டூடுல் (Google Doodle) ஒன்றை வெளியிட்டுள்ளது. www.google.com என்ற கூகுளின் முகப்பு பக்கத்திலும், அது சார்ந்த அடுத்த தேடல் பக்கங்களிலும் இந்த டூடுல் இடம் பெற்றுள்ளது. பயனர்கள் https://g.co/doodle/mbje4wu என்ற லிங்க் மூலம் கூகுளின் காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.
டூடுலில் நீர்த்துளிகளின் அனிமேஷன் கிராபிக்ஸ் இடம்பெற்றிருந்தது. டூடுலில், இரண்டு தனித்தனி சோகத் துளிகள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியான இதயத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. "உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் காதலர்கள், நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணைவர்களுக்கு காதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுகள், வாழ்த்துக்கள் என பலவற்றின் மூலம் மூலம் அன்பை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டின் காதல் தினத்தை இன்றைய கூகுள் டூடுல் மூலம் கொண்டாடுவோம் " என்ற விதமாக கூகுள் டூடுல் அமைக்கப்பட்டுள்ளது.
காதலர் தினத்தை கொண்டாட யாரும் இல்லையா.. கவலை வேண்டாம்! உங்களுக்காகவே காத்திருக்கும் AI
கூகுள் கலை மற்றும் கலாச்சாரம் பக்கத்தில் காதலர் தினத்தின் மகிமை, காதலின் பலம், பண்டைய காலத்தில் காதலின் மகத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் விவரித்துள்ளது. குறிப்பாக வரலாற்றில் இடம்பெற்றுள்ள 7 காதல் ஜோடிகளின் கதை சிறப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காதல் கலையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 8 விஷயங்களை பட்டியலிட்டுள்ளது.
கூகுளின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வீடியோ:
கூகுள் டூடுலைப் போலவே, கூகுளின் டுவிட்டர் மற்றும் யூடியூப் பக்கத்திலும் காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.