கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜிமெயிலின் HTML பதிப்பை மட்டும்தான் மூடுகிறது என்றும் முழு மின்னஞ்சல் சேவையையும் மூடவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தனது பிரபலமான மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மூடப்பட இருப்பதாக சமூக ஊடக தளங்களில் வதந்திகள் வந்ததை அடுத்து, கூகுள் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி, ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் அனுப்பிய மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, ஜிமெயில் சேவையை மூடப்போவதாக வதந்தி பரவியது. "ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு, ஜிமெயில் மின்னஞ்சல்களை அனுப்புதல், பெறுதல் மற்றும் சேமிப்பதை ஆதரிக்காது" என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருப்பதாக ஸ்கிரீன்ஷாட் காட்டுகிறது.

"உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை இணைத்து, தடையற்ற தகவல்தொடர்புக்கு, எண்ணற்ற இணைப்புகளை வளர்த்துள்ள நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிமெயிலின் பயணம் முடிவடைகிறது. ஆகஸ்ட் 1, 2024 முதல், ஜிமெயில் அதன் சேவையை நிறைவு செய்யும் விதமாக, மின்னஞ்சல்களை அனுப்புவது, பெறுவது அல்லது சேமிக்கும் வசதி இருக்காது" என்று ஸ்கிரீன்ஷாட்டில் கூறப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவன லேண்டர்! அப்பல்லோவுக்குப் பின் சாதித்த ஒடிசியஸ்!

இந்த ஸ்கிரீன்ஷாட் ட்விட்டர் மற்றும் டிக்டாக்கில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டது. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடலான ஜெமினி போதிய வரவேற்பைப் பெறாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. சில நாட்களுக்கு முன் ஜெமினி AI டூல் மூலம் உருவாக்கப்பட்ட நாஜி வீரர்களின் படம் சர்ச்சையானதன் எதிரொலி என்றும் சொல்லப்பட்டது.

Scroll to load tweet…

இறுதியாக கூகுள் ஜிமெயில் சேவை நிறுத்தம் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. "ஜிமெயில் இங்கேயேதான் இருக்கும்" என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜிமெயிலின் HTML பதிப்பை மட்டும்தான் மூடுகிறது என்றும் முழு மின்னஞ்சல் சேவையையும் மூடவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. @gmail ஈமெயில் முகவரிகள் நன்றாக வேலை செய்கின்றன என்று கூறியுள்ள கூகுள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள், கூகுள் மூடப்படுவதாகப் பரவும் தகவல் "முட்டாள்தனமான புரளி" என்றும் கூறியுள்ளனர்.

ஜிமெயிலின் HTML பதிப்பு மெதுவான இன்டர்நெட் சேவை இருக்கும் இடங்ககளில் பயனர்கள் மின்னஞ்சல்களைப் பார்க்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. அதை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அந்த வசதியை நீக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பேடிஎம் பயனர்கள் கவனிங்க... UPI பேமெண்ட் பிரச்சினையை சரிசெய்ய ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கை