AI தொழில்நுட்பத்தில் சக்திவாய்ந்த டாப் 10 நாடுகள்! இந்தியாவுக்கு எந்த இடம்?

செயற்கை நுண்ணறிவுச் சந்தை 2030 வரை 36.6% CAGRல் வளர்ச்சி அடையும். 2025ல் $243.70 பில்லியன் மதிப்பை எட்டும். ஸ்டான்ஃபோர்டு தரவரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும் உள்ளன. AI காப்புரிமையில் சீனா முன்னிலை வகிக்கிறது. இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் AI சட்டத்தை இயற்றியுள்ளது.

Global AI Power Rankings: Where does India rank?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகையே மாற்றி வருகிறது. பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தி வருகிறது. 2024 முதல் 2030 வரை, AI சந்தை 36.6% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் AI சந்தையின் மதிப்பு 243.70 பில்லியன் டாலரை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்போர்டின் குளோபல் வைபிரன்ஸி தரவரிசை 2023 இன் படி, அமெரிக்கா AI தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட நிலையில் தனித்து நிற்கிறது. பல்வேறு அம்சங்களில் மற்ற அனைத்து நாடுகளையும் மிஞ்சுகிறது. உயர்தர AI ஆராய்ச்சியை உருவாக்குவதிலும், முக்கிய இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குவதிலும், கணிசமான தனியார் முதலீட்டை ஈர்ப்பதிலும், அமெரிக்கா முன்னணியில் உள்ளது.

இது தவிர, AI தொடர்பான அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளையும் , புதிய AI ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதிலும் வலுவான நிலையில் உள்ள நாடு அமெரிக்காதான். இருப்பினும், சமீபத்தில், AI தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது.

அமெரிக்கா பல அம்சங்களில் சிறந்து விளங்கினாலும், சீனா AI தொடர்பான தனியார் முதலீட்டை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி AI காப்புரிமையில் சீனா முன்னணியில் இருக்கிறது என ஸ்டான்போர்டு ஆய்வு கூறுகிறது.

ஸ்டான்ஃபோர்டு AI தரவரிசை:

ஸ்டான்போர்டின் அறிக்கை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பொருளாதார செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு அத்தியாவசிய அளவுகோல்களின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிடுகிறது. 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் டாப் 10 உலக நாடுகள் எவை என்று பார்க்கலாம்.

Global AI Power Rankings: Where does India rank?

AI தொடர்பாக குறிப்பிடத்தக்க சட்டத்தை இயற்றிய முதல் பிராந்தியங்களில் ஐரோப்பாவும் ஒன்றாகும். 2024ஆம் ஆண்டில் ஐரோப்பிய யூனியன் AI சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் உலகளாவிய AI தலைமைத்துவத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் ஐரோப்பிய யூனியன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இது AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஐரோப்பாவின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.

இந்தியாவுக்கு எந்த இடம்?

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதன் AI திறன்களை மேம்படுத்துவதற்கும், தரமான ஆராய்ச்சி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும், முக்கியத்துவம் தருகிறது. அந்த நாடு ஸ்டான்ஃபோர்டு தரவரிசையில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற பிற ஆசிய நாடுகளும் முதல் பத்து நாடுகளின் வரிசையில் இடம்பெற்றுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios