சமூக வலைத்தளங்கள் அல்லது ஜிமெயில் பாஸ்வேர்டுகளை மறந்துவிட்டீர்களா? உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட அனைத்து பாஸ்வேர்டுகளையும் சில எளிய படிகளில் எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. மலிவான இணைய சேவை மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய செயலிகளால், ஸ்மார்ட்போன்கள் அனைவரது கையிலும் தவழ்கின்றன. ஆனால், உங்கள் போனில் பல ரகசிய அம்சங்கள் மறைந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றில் ஒன்றான, நீங்கள் மறந்துபோன பாஸ்வேர்டுகளை எப்படி கண்டுபிடிப்பது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சேமித்த பாஸ்வேர்டுகள் எங்கே?
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிமெயில் போன்ற செயலிகள் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ளன. இதில், பலரும் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளுக்கான பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருப்பதில்லை. தானாக உள்நுழைய (automatic login) அனுமதிக்கப்படுவதால், பலரும் பாஸ்வேர்டை மறந்துவிடுகிறோம். ஒருவேளை உங்கள் தரவு தொலைந்துவிட்டால் அல்லது மற்றொரு சாதனத்தில் அதே செயலியைத் திறக்க வேண்டும் என்றால், உங்களுக்கு பாஸ்வேர்ட் தேவைப்படும். பயப்பட வேண்டாம், இதற்கு ஒரு எளிய வழி உள்ளது. உங்கள் அனைத்து பாஸ்வேர்டுகளும் உங்கள் போனில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. அதை எப்படிப் பார்ப்பது என்று பார்ப்போம்.
பாஸ்வேர்டுகளை பார்க்க எளிய வழிமுறைகள்
உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்டுகளைக் கண்டறிய, இந்த எளிய படிகளைப் பின்பற்றவும்:
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'Settings' என்பதற்குச் செல்லவும்.
கீழே ஸ்க்ரோல் செய்து 'Google' விருப்பத்தைக் கண்டறியவும்.
'Google' என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'Google Services' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
'All Services' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
'Autofill with Google' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
'Google Password Manager' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, உங்கள் போனில் உள்நுழைந்துள்ள அனைத்து செயலிகளும் வரிசையாகக் காட்டப்படும்.
நீங்கள் எந்த செயலியின் பாஸ்வேர்டை பார்க்க வேண்டுமோ, அதை கிளிக் செய்யவும்.
அடுத்து, உங்கள் கைரேகை அல்லது பாஸ்வேர்டை பயன்படுத்தி, அந்த செயலியின் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நீங்கள் பார்க்கலாம். இந்த எளிதான முறையில் உங்கள் மறந்துபோன பாஸ்வேர்டுகளை நொடிகளில் கண்டுபிடிக்கலாம்.
