ஏற்றுமதியில் அதிக தீவிரம்... சென்னை போர்டு ஆலையில் மீண்டும் உற்பத்தி துவக்கம்...!
வெறும் 150 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வந்தனர்.
போர்டு இந்தியா நிறுவனம் தனது தமிழ் நாட்டு ஆலையில் உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்கி இருக்கிறது. இந்த ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மே 30 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆலையை மூடப்பட இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து சிறப்பான பணித் தொகை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
சுமார் 300-க்கும் அதிக ஊழியர்கள் உற்பத்தியை மீண்டும் துவங்க விருப்பம் தெரிவித்தனர் என போர்டு இந்தியா தெரிவித்து உள்ளது. அதன்படி ஜூன் 14 ஆம் தேதியில் இருந்து போர்டு இந்தியா ஆலையில் உற்பத்தி துவங்கி நடைபெற்று வருகிறது. எனினும், தற்போது வெறும் 150 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆலையில் மொத்தம் 2600 பேர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி பணிகள்:
“ஜூன் 14 ஆம் தேதியில் இருந்து சென்னை ஆலையில் இரண்டு ஷிப்டுகளில் உற்பத்தி பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் 300-க்கும் அதிகமானோர் மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். இது மேலும் அதிகரித்து வருகிறது. ஜூன் 14 ஆம் தேதியில் இருந்து சட்ட விரோதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் ஊதிய தொகுப்பில் இருந்து சம்பலம் பிடித்தம் செய்யப்படும்,” என ஃபோர்டு இந்தியா தெரிவித்து இருக்கிறது.
150 ஊழியர்கள் தவிர, ஆலையினுள் இருந்த படி போராட்டம் நடத்தி வந்த ஊழியர்கள் தற்போது வெளியே வந்து போராட்டத்தை தொடர்கின்றனர். ஜூன் 14 ஆம் தேதியில் இருந்து பணிக்கு திரும்புவதோடு, நிறுவனத்தின் உற்பத்தி திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பணித் தொகுப்பு வழங்கப்படும் என போர்டு இந்தியா அறிவித்து உள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
பணித் தொகுப்பு பற்றி பேசிய யூனியன் அதிகாரி ஒருவர், இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்த போர்டு இந்கியா பல ஊழியர்களுக்கு பணித் தொகுப்பு பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன. இதன் காரணமாக இதுகுறித்து முடிவு எடுக்க அதிக கால அவகாசம் வழங்க கோரியுள்ளனர். இதன் காரணமாக கால அவகாசத்தை ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து ஜூன் 18 ஆம் தேதி வரை நீட்டித்து இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது.