Flipkart வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு..! இப்படி செய்யவாங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..!
அமேசானுக்கு அடுத்தப்படியாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் முன்னணி இடத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் உள்ளது. அமேசானில் உள்ள பெரும்பாலான வசதிகள் ஃபிளிப்கார்ட் ஷாப்பிங்கிலும் உள்ளன. தற்போது அமேசானுக்குப் போட்டியாக பிக் பில்லியன் டே என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை நடத்தி வருகிறது.
ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பொருட்களை ரிட்டர்ன் செய்யும் போது, அதற்கும் கட்டணம் விதிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அமேசானுக்கு அடுத்தப்படியாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் முன்னணி இடத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் உள்ளது. அமேசானில் உள்ள பெரும்பாலான வசதிகள் ஃபிளிப்கார்ட் ஷாப்பிங்கிலும் உள்ளன. தற்போது அமேசானுக்குப் போட்டியாக பிக் பில்லியன் டே என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க;- Flipkart Hotels: இனி பிளிப்கார்ட் மூலமாகவே ஹோட்டல் புக் செய்யலாம்!!
இந்த நிலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர் சேவையில் கூடுதல் கட்டணம் விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நாம் ஒரு பொருளை வாங்கிவிட்டு வேண்டாம் என்று அவர்களுக்கே ரிட்டர்ன் செய்யும் போது இதுவரையில் எந்த கேள்வியும் கேட்காமல் வாங்கி விடுவார்கள். இதற்கு முன் நாம் ப்ளஸ் உறுப்பினராக இருந்தாலும் சரி இல்லை சராசரியான உறுப்பினராக இருந்தாலும் சரி எல்லாம் இலவசமாக இருந்தது, ரிட்டர்ன் கட்டணம் என்று ஒன்று இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் பொருள்களை திரும்ப அனுப்பி கொள்ளலாம்.
ஆனால் இனி வரும் காலங்களில் நாம் எதாவது பொருள்களை வாங்கிவிட்டு திரும்ப செலுத்தினால் 50 ரூபாய் வரை திரும்ப செலுத்த வேண்டியது இருக்கும் என கூறியுள்ளனர். இதை போன்ற ஸ்க்ரீன் ஷாட்களும் வெளியிட்டுள்ளது ஃப்ளிப்க்கார்ட் நிறுவனம். ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே திரும்ப செலுத்தக்கூடிய நிலைமை ஏற்படும். ஏனெனில் பொருட்களை ஆன்லைனில் பார்த்து ஆர்டர் செய்யும் போது, அந்த குறிப்பிட்ட பொருளின் நிறம் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் அவர்கள் நமக்கு டெலிவரி செய்வது ஒன்றாக இருக்கும். இந்த நிலைமையில் பெரும்பாலானோர் ரிட்டர்ன் தான் செய்வார்கள். ஆனால், இதற்கும் கட்டணம் விதிக்கப்படும் போது, வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட்டில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது.
இதற்கு ஃப்ளிப்க்கார்ட் நிறுவனம் என்ன காரணம் கூறி இருக்கின்றது என்றால் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் பொருட்களை திரும்ப செலுத்திகிறார்கள், ஆகையால் ஃபிளிப்கார்ட்டுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிளிப்கார்ட் இப்படி கூறினாலும், ஒரு பொருளை ரிட்டர்ன் செய்யும் போது, அந்த பொருளை விற்பவருக்கே நஷ்டம் ஏற்படும்.
இதையும் படிங்க;- ஐபோன் விற்பனையை உடனடியாக நிறுத்த அரசு உத்தரவு