Flipkart Diwali Sale ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!
Flipkart ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர் சேல் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் தீபாவளி சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு ஆஃபர்கள் பெரிய அளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
அமேசானுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை நடத்தியது. கடந்த மாதம் தொடங்கிய இந்த தள்ளுபடி விற்பனையில் எக்கச்சக்க பொருட்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த சலுகைகள் நேற்று அக்டோபர் 16 ஆம் தேதியோடு முடிவடைந்தன.
இந்த நிலையில், தற்போது பிளிப்கார்ட்டில் தீபாவளி தள்ளுபடி விற்பனை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19 ஆம் தேதி முதல், 23 ஆம் தேதி வரையில், அதாவது ஐந்து நாட்கள் பிக் தீபாவளி சேல் நடைபெறுகிறது.
வழக்கமான ஆஃபர்களுடன் SBI வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. பேடிஎம் வாலெட், UPI பணப்பரிவர்த்தனை மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கும் 10 சதவீத உடனடி தள்ளுபடி ஆஃபர் உண்டு.
Flipkart இல் தரமற்ற பொருட்களை விற்று நூதன மோசடி செய்வதாக பிரபல யூடியூபர்கள் குற்றச்சாட்டு !!
இந்த பிக் தீபாவளி சேலில் ரியல்மி, போகோ, ஒப்போ, ரெட்மி, ஐபோன், மோட்டோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்கள், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஆஃபர்கள் உள்ளன. ஏசிகளுக்கு 55 சதவீீதம் வரையில் தள்ளுபடி, ஆடைகளுக்கு 60 முதல் 90 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ரூபாய் ஆஃபர் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஆஃபர்கள் விவரங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஏதுவாக நோட்டிக்கேஷன் வசதியும் கொண்டுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது இமெயில், மொபைல் நம்பர் கொடுத்து ஆஃபர் குறித்த உடனடி அறிவிப்பை பெறலாம்.
இங்கயும் விளம்பரமா ? Netflix புதிய சந்தா திட்டம்!
அமேசானுடன் ஒப்பிடுகையில், பிளிப்கார்ட் தளத்தில் நூதன மோசடி சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக கடந்த சில வாரங்களாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, நீங்கள் ஆர்டர் செய்யும் தயாரிப்பு, அதன் விற்பனையாளர், டெலிவரி முறை போன்றவற்றை கவனமாக சோதனை செய்த பிறகே ஆர்டர் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.