சென்னை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மையத்தில் தீ விபத்து... விரைந்து விளக்கமளித்த ஏத்தர் எனர்ஜி...!
ஏத்தர் எனர்ஜி எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் அமைந்து இருக்கும் ஏத்தர் எனர்ஜி எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, ஏத்தர் எனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறது.
அதன்படி, “மற்றவர்கள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளும் முன், சென்னையில் உள்ள ஏத்தர் எனர்ஜி எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் எக்ஸ்பீரியன்ஸ் மையம் மற்றும் அதில் இருந்த ஸ்கூட்டர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. விரைவில் இந்த எக்ஸ்பீரியன்ஸ் செண்டர் பயன்பாட்டுக்கு வந்து விடும்” என ஏத்தர் எனர்ஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்பாக ஏராளமான தீ விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இதுவரை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் எந்த விதமான சம்பவங்களிலும் பாதிக்கப்படாமலேயே இருக்கிறது. எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக ஓலா எலெக்ட்ரிக், ஒகினவா, பியூர் EV மற்றும் பூம் மோட்டார்ஸ் போன்ற நிறுவன மாடல்கள் தீ விபத்தை ஏற்படுத்தின. இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்த விபத்துக்களில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பின்பற்றம் தரக் கட்டுப்பாடு பற்றி பெரும் சந்தேகம் கிளம்பியது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் விஷயத்தில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்படாதது பற்றி மத்திய அரசு வருத்தம் தெரிவித்து இருந்தது.
ஓலா எலெக்ட்ரிக்:
சமீபத்தில் ஓலா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சஸ்பென்ஷன் உடைந்து விழுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாக விபத்தில் சிக்கியதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்த நிலையிலா, ஓலா எலெக்ட்ரிக் இது குறித்து விளக்கம் அளித்து இருந்தது.