உங்களோட ட்விட்டர் அக்கவுண்ட் போச்சா.! பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க் - முழு விபரம்
ட்விட்டர் கணக்குகளை நீக்கும் வேலையில் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். ஏன், எதற்கு என்பதை பார்க்கலாம்.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வருவதற்கு முன்பாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தது. ட்விட்டர் நிறுவத்தின் 5 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கினார்.
கடைசியாக 2022ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து மொத்தமாக வாங்கினார். அதன்பின் தேவையற்ற ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, சந்தா கட்டணங்களை உயர்த்துவது உள்ளிட்ட அதிரடி முடிவுகளை எடுத்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கவில்லை. எதிர்பார்த்த வரவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக ஊடக தளமான ட்விட்டரில் (Twitter) பல ஆண்டுகளாக செயலிழந்த கணக்குகளை அகற்றும் என்று எலான் மஸ்க் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். மைக்ரோ - பிளாக்கிங் தளத்தில் பயனர்கள் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காணலாம் என்று மஸ்க் கூறினார். ட்விட்டரின் கொள்கையின்படி, நீண்டகால செயலற்ற தன்மையால் நிரந்தரமாக அகற்றப்படுவதைத் தவிர்க்க, பயனர்கள் 30 நாட்களுக்கு ஒரு முறையாவது தங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் சுயவிவரத்தில் இருந்து மரபு சரிபார்க்கப்பட்ட புளூ டிக் ஐ ட்விட்டர் கடந்த மாதம் நீக்கியது. மஸ்க் கணக்கு சரிபார்ப்பை ட்விட்டரின் ப்ளூ சந்தாவின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளார். இது சோசியல் மீடியாவில் உள்ள குறிப்பாக ட்விட்டரில் உள்ள பாட் கணக்குகளின் சிக்கலைச் சமாளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த மாதம் ரூ.436 எடுக்கப்படும்.. ஏன், எதற்கு தெரியுமா? முழு விபரம்