Asianet News TamilAsianet News Tamil

ஜிமெயிலுக்கு ஆப்பு.. விரைவில் வரப்போகும் எக்ஸ்மெயில்.. புது பிளானை கையில் எடுத்த எலான் மஸ்க்..

கூகுள் ஜிமெயிலுக்கு மாற்றாக எக்ஸ்மெயில் விரைவில் வருகிறது என்று டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Elon Musk Says That Xmail, Gmail's Alternative, Is Coming Soon-rag
Author
First Published Feb 23, 2024, 8:10 PM IST

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூகுள் நிறுவனத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.  முன்னர் ட்விட்டர் தளமான எக்ஸ் விரைவில் ஜிமெயில் சேவைக்கு மாற்றாக இருக்கும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். நீங்கள் மின்னஞ்சல் சேவையைத் திட்டமிடுகிறீர்களா என்று X இல் கேட்டபோது, இந்த பதிலை கொடுத்துள்ளார்.

Elon Musk Says That Xmail, Gmail's Alternative, Is Coming Soon-rag

X இன் பொறியியல் மற்றும் பாதுகாப்பு குழுவின் உறுப்பினரான Nate McGrady, XMail எப்போது தொடங்கப்படும் என்று கேட்டிருந்தார். “ஜிமெயில் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டது. விரைவில் எக்ஸ்மெயிலுக்கு மாறுவதற்கான நேரம் இது” என்று பயனர் ஒருவர் பதிலளித்தார்.

Elon Musk Says That Xmail, Gmail's Alternative, Is Coming Soon-rag

மற்றொருவர், "நான் இப்போது எனது ஹாட்மெயிலை எப்படிப் பயன்படுத்துகிறேனோ, அதே போல எனது ஜிமெயிலைப் பயன்படுத்துவேன். எதற்கு என்றால், குப்பைகளுக்கு தான் பயன்படுத்துவேன்" என்று கருத்து தெரிவித்தார். பல்வேறு பயனர்கள் இதற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..

Follow Us:
Download App:
  • android
  • ios