ட்விட்டர் இப்போது அதிகாரப்பூர்வமாக x.com ஆக மாறியுள்ளது. எலான் மஸ்க் முழுமையான டொமைன் மாற்றத்தை அறிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை அக்டோபர் 2022 இல் வாங்கினார். பிறகு அதன் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் சின்னமான பறவை சின்னத்தை புதிய X லோகோவுடன் மாற்றினார். பயனர்கள் இன்று twitter.com ஐப் பார்வையிட்டபோது, அவர்கள் x.com தளத்திற்கு திருப்பி விடப்பட்டனர்.

பிரௌசர் வழியாக மைக்ரோ பிளாக்கிங் தளத்தை அணுகுபவர்களை ஒரு பாப்-அப் அறிவிப்பு வரவேற்றது. அதில், “x.com க்கு வரவேற்கிறோம்! நாங்கள் எங்கள் URL ஐ மாற்றுகிறோம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். ஆனால் உங்கள் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு அமைப்புகள் அப்படியே இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள X இல் வெளியிட்டுள்ள பதிவில், முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட தளம் x.com க்கு முழுமையாக இடம்பெயர்ந்துள்ளதாக எலான் மஸ்க் பகிர்ந்து கொண்டார். அதில், “அனைத்து முக்கிய அமைப்புகளும் இப்போது x.com இல் உள்ளன." நீல நிற வட்டத்தில் வெள்ளை எக்ஸ் கொண்ட லோகோவின் படத்தையும் அவர் வெளியிட்டார். லோகோவில் இரண்டு நீல நிற நிழல்கள் உள்ளன. இந்த பிளாட்ஃபார்மின் லோகோ மீண்டும் மாற்றப்படுமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Scroll to load tweet…

எலான் மஸ்க் அக்டோபர் 2022 இல் ட்விட்டரை வாங்க 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை முடித்தார். பிறகு எக்ஸ் என பெயர் மாற்றினார். 1999 ஆம் ஆண்டு முதல், மஸ்க் தனது நிறுவனங்களின் பிராண்டிங்கில் X என்ற எழுத்தை இணைத்துக்கொண்டார் என்றுதான் கூற வேண்டம். x.com - ஒரு ஆன்லைன் நிதி சூப்பர் ஸ்டோர். இது பின்னர் பேபால் உடன் இணைக்கப்பட்டது. 2017 இல், PayPal x.com டொமைனை மீண்டும் எலான் மஸ்க்கிற்கு விற்றது.

Scroll to load tweet…

இதேபோல், விண்வெளி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக 2002 இல் SpaceX நிறுவப்பட்டது. மஸ்க் ட்விட்டரை வாங்கியபோது, ஒப்பந்தத்தை முடிக்க எக்ஸ் கார்ப் என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் X ஹோல்டிங்ஸ் கார்ப்பரேஷனின் முழு சொந்தமான துணை நிறுவனமாகும். இது முற்றிலும் மஸ்கிற்கு சொந்தமானது.

எலான் மஸ்க் , முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ், ஆடியோ, வீடியோ, செய்தி அனுப்புதல், பணம் செலுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அனைத்து பயன்பாடுகளை உள்ளடக்கிய தளமாக மாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியைத் தாக்கும் சூரியப் புயல்.. இணையம், மொபைல் நெட்வொர்க் பாதிக்கும்.. எலான் மஸ்க் கொடுத்த அலெர்ட்..