ரோபோ-டாக்சி ஸ்பெஷல் பிஜாக்ட்... டெஸ்லாவின் புது ஸ்கெட்ச்... சூப்பர் தகவல் கொடுத்த எலான் மஸ்க்..!
டெஸ்லா நிறுவனத்தின் புதிய ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்.
டெஸ்லா நிறுவனம் ரோபோடாக்சி பயன்பாட்டுக்காக பிரத்யேக வாகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இதற்காக மூன்று புதிய வாகனங்கள் உருவாக்கப்பட இருக்கிறது என டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.
ரோபோ டாக்சி:
ரோபோ-டாக்சி கார் எதிர்காலத்திற்கு ஏற்றவாரு காட்சியளிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார். இதுதவிர புதிய ரோபோடாக்சி போற்றி எலான் மஸ்க் எந்த தகவலையும் வழங்கவில்லை. டெக்சாசை அடுத்த ஆஸ்டின் அருகில் உள்ள புதிய உற்பத்தி ஆலையில் டெஸ்லா சைபர்டிரக் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எலான் மஸ்க் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய ரோட்ஸ்டர் மற்றும் எலெக்ட்ரிக் செமி மாடல்களின் உற்பத்தி பணிகளும் இந்த ஆலையில் நடைபெற இருக்கிறது என எலான் மஸ்க் மேலும் தெரிவித்தார்.
ஆயிரம் பேர் பங்கேற்பு:
இதுபற்றிய அறிவிப்புகளை எலான் மஸ்க், கடந்த வியாழக் கிழமை ஜிகா டெக்சாஸ்-இல் நடைபெற்ற சைபர் ரோடியோ நிகழ்வில் வெளியிட்டார். பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இருக்கும் புதிய ஆலையில், இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐந்து லட்சம் வாகனங்கள்:
முந்தைய தகவல்களில், சுமார் 15 ஆயிரம் பேர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது. இதே ஆலையை டெஸ்லா நிறுவனம் தனது புதிய தலைமையகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. புதிய ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். இதே ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல் வை சிறிய ரக எஸ்.யு.வி.க்கள் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இலக்கு:
முன்னதாக 2019 ஆண்டில் எலான் மஸ்க் தானியங்கி முறையில் செயல்படும் ரோபோ-டாக்சிக்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தார். எனினும், இன்று வரை டெஸ்லா நிறுவனத்தின் முழுமையான தானியங்கி டிரைவிங் மென்பொருள் தேர்வு செய்யப்பட்ட பபயனர்களிடம் மட்டும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக இருந்து வருகிறது.
ரோபோட்:
"ஆஸ்டின் உற்பத்தி ஆலை, ஜெர்மனியில் புதிய உற்பத்தை ஆலைகளை உருவாக்கும் பணிகளில் இந்த ஆண்டு கவனம் செலுத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் புதிய ரோபோட் ஒன்றை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு அதிகளவு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன," என்று எலான் மஸ்க் தெரிவித்தார். ஆஸ்டின் பகுதியில் அமையும் உற்பத்தி ஆலையில் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்ற இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.