டுவிட்டருக்கு எதிராக சொந்த சமூக வலைதளம்? எலான் மஸ்க் அதிரடி..!
இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தயவு செய்து கவனமாக வாக்கு செலுத்துங்கள்," என குறிப்பிட்டு இருந்தார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் சொந்தமாக சமூக வலைதளம் உருவாக்குவது பற்றி மிகத் தீவிரமாக யோசனை செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். டுவிட்டர் பயனர் ஒருவர் எலான் மஸ்கிடம் இது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது எலான் மஸ்க் இவ்வாறு கூறினார்.
டுவிட்டர் பயனரான பிரனாய் பத்தோல் நேற்று எலான் மஸ்கிடம், "புதிதாக சமூக வலைதள சேவையை தொடங்குவது பற்றி பரீசீலனை செய்வீர்களா? ஓபன் சோர்ஸ் அல்காரிதம், கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம், சிலரை ஊக்குவிக்கும் போய் தகவல்கள் மிக குறைவாக இருக்கும் படியான தளம். இதுபோன்ற தளம் உருவாக வேண்டும் என நான் கருதுகிறேன்," என கேள்வி எழுப்பினார்.
எலான் மஸ்க் பதில்:
இவரது டுவிட்டுக்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது பற்றி தீவிர யோசனை செய்கிறேன்," என ஒற்றை வரியில் பதில் அளித்துள்ளார். முன்னதாக டுவிட்டர் பயனர்கள் மத்தியில் எலான் மஸ்க் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் அவர் "ஜனநாயகம் சீராக இயங்க கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம். டுவிட்டர் கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?" என கேள்வி எழுப்பி இருந்தார்.
இத்துடன், "இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தயவு செய்து கவனமாக வாக்கு செலுத்துங்கள்," என குறிப்பிட்டு இருந்தார். இத்துடன், டுவிட்டர் கருத்து சுதந்திரம் இருப்பதாக கூறி, தனது சட்ட விதிகளின் படி அதனை ஏற்க மறுத்து வருகிறது. இது ஜனநாயகத்தை மழுப்பும் வகையில் உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்?" என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தனி சமூக வலைதளம்:
எலான் மஸ்க் டுவிட்களின் படி ஒருவேளை அவர் சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில், இதே போன்ற முயற்சியில் ஏற்கனவே இறங்கி இருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இவரும் இணைவார். இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் இதே போன்ற இதர தளங்களுக்கு மாற்றாக புது சேவையை உருவாக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன.
எனினும், இவ்வாறு உருவான எந்த சேவையும் உலகளவில் வளர்ந்து நிற்கும் பெரிய பிராண்டுகளுக்கு இணையாக பெயர் பெறவில்லை. தற்போதைய தகவல்களின் படி புதிதாக சமூக வலைதளம் உருவாக்கும் விவகாரத்தில் எலான் மஸ்க் 100 சதவீதம் ஈடுபாடு இருப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. இவரின் டுவிட்டர் ஃபாளோயர்கள் மட்டுமே தனி சமூக வலைதளம் உருவாக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.