Asianet News TamilAsianet News Tamil

ஆண்ட்ராய்டு டு ஐபோனில் - வாட்ஸ்அப் சாட்களை டிரான்ஸ்பர் செய்ய ஈசி டிப்ஸ்

சாட் ஹிஸ்ட்ரி, தனிப்பட்ட சாட்கள் அல்லது க்ரூப் சாட்களில் துவங்கி மீடியா மற்றும் பல்வேறு விதமான தரவுகள் என அனைத்தையும் மிக எளிதில் டிரான்ஸ்பர் செய்து விட முடியும். 

easy tricks to transfer whatsapp chats from android smartphone to iPhone
Author
India, First Published Jun 25, 2022, 1:39 PM IST

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை மாற்றி விட்டு புதிதாக ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.-க்கு மாற முடிவு செய்து வருகின்றீர்களா? அப்படி எனில், நீங்கள் உங்களது டேட்டாவை புதிய போனிற்கு மாற்ற வேண்டும். ஆனால் இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியுமா? கவலை வேண்டாம், அருகாமையில் உள்ள டேட்டா கேபில் மற்றும் இதர அக்சஸரீக்களை தேடி அலைய வேண்டாம். உங்களின் சாட் ஹிஸ்ட்ரி, தனிப்பட்ட சாட்கள் அல்லது க்ரூப் சாட்களில் துவங்கி மீடியா மற்றும் பல்வேறு விதமான தரவுகள் என அனைத்தையும் மிக எளிதில் டிரான்ஸ்பர் செய்து விட முடியும். எனினும், உங்களால் கால் ஹிஸ்ட்ரியை மட்டும் டிரான்ஸ்பர் செய்ய முடியாது. 

எந்த மாதிரியான டிவைஸ் செட்டிங்ஸ் தேவைப்படும்?

தற்போதைய ஸ்மார்ட்போனில் இருந்து புதிய போனிற்கு டேட்டாவை பரிமாற்றம் செய்து கொள்வது மிகவும் எளிய காரியம் தான். ஆனால் இதை செய்ய சில தொழில்நுட்ப யுக்திகளை கையாள வேண்டும். இதை எப்படி செய்ய வேண்டும் என் வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம். 

1 - இரு சாதனங்களும் ஒரே வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

2 - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மூவ் டு ஐ.ஓ.எஸ். (Move to iOS) செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

3 - பயனரில் ஸ்மார்ட்போன் மாடலில் லாலிபாப், SDK2 21 அல்லது அதற்கும் அதிக அல்லது ஆண்ட்ராய்டு 5 அல்லது அதற்கும் பின் வெளியான ஓ.எஸ். இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

4 - இரு சாதனங்களும் சார்ஜருடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

easy tricks to transfer whatsapp chats from android smartphone to iPhone

- முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மூவ் டு ஐ.ஓ.எஸ். செயலியை திறக்கவும். 

- உங்களது ஐபோனில் குறியீடு ஒன்று இடம்பெற்று இருக்கும். அதனை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கேட்கப்படும் போது பதிவிட வேண்டும்.

- இனி Continue ஆப்ஷனை க்ளிக் செய்து, அதன் பின் வரும் வழிமுறைகளை கவனமாக பின் தொடர வேண்டும்

இவ்வாறு செய்த பின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்த தரவுகள் அனைத்தும் ஐபோனிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு விடும். 

Follow Us:
Download App:
  • android
  • ios