Asianet News TamilAsianet News Tamil

ரூ. 14 லட்சம் விலையில் புது பைக் அறிமுகம்.. டுகாட்டி அதிரடி.... என்ன அம்சங்கள் தெரியுமா?

இந்த மாடலில் டார்க் சிறிதளவு அதிகப்படுத்தப்பட்டு இருப்பதோடு, மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த எடையும் ஐந்து கிலோ வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

Ducati Multistrada V2 launched in India
Author
India, First Published Apr 25, 2022, 3:11 PM IST

டுகாட்டி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் சப்-1000சிசி ஸ்போர்ட்ஸ் டூரர் பிரிவில் இடம்பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா மோட்டார்சைக்கிள் டிரையம்ப் டைகர் 900 சீரிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ. F 900 XR போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிளில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 937சிசி, டெஸ்டா-ஸ்டிரெட்டா, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செயல்திறனை பொருத்த வரை இந்த என்ஜின் 111.5 பி.ஹெச்.பி. பவர், 94 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

சஸ்பென்ஷன்:

இந்த மாடலில் டார்க் சிறிதளவு அதிகப்படுத்தப்பட்டு இருப்பதோடு, மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த எடையும் ஐந்து கிலோ வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் மல்டிஸ்டிராடா வி2 மாடலின் எஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கை ஹூக் சஸ்பென்ஷன் இவோ செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

Ducati Multistrada V2 launched in India

இத்துடன் மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய செட்டப் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 320 மில்லிமீட்டர் ரோட்டார்கள் மற்றும் பிரெம்போ மோனோபிளாக் கேலிப்பர்களும், பின்புறத்தில் 265 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் பிரெம்போ கேலிப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கிற்கு டுவின் பாட் ஹெட்லைட், செமி ஃபேரிங், உயரமான விண்ட்-ஸ்கிரீன், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், 5 இனஅச் கலர் TFT டிஸ்ப்ளே, கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், வெஹிகில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் ஸ்போர்ட், டூரிங், அர்பன் மற்றும் எண்டியுரோ என நான்கு விதமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இதன் எஸ் வேரியணட்டில் குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம், டுகாட்டி கார்னெரிங் லைட்கள் மற்றும் டுகாட்டி ஷிப்ட் அப் அண்ட் டவுன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. 

விலை விவரங்கள்:

டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 ரெட் லிவரி ரூ. 14 லட்சத்து 65 ஆயிரம்
டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 எஸ் ரெட் லிவரி ரூ. 16 லட்சத்து 65 ஆயிரம்
டுகாட்டி மல்டிஸ்டிராடா வி2 எஸ் கிரெ லிவரி ரூ. 16 லட்சத்து 84 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios