Asianet News TamilAsianet News Tamil

சட்டுனு முடிச்சு விடுங்க - 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தும் மத்திய அரசு

மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான கட்டணத்தை விரைவில நிர்ணயம் செய்ய வலியுறுத்தி இருக்கிறது.

DoT requests TRAI to speed 5G spectrum pricing for quicker rollout in India
Author
Tamil Nadu, First Published Feb 25, 2022, 3:13 PM IST

இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான விலையை விரைந்து நிர்ணயம் செய்ய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இந்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் கடிதம் மூலம் வலியுறுத்தி இருக்கிறது. இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவையை ஆகஸ்ட் 15, 2022-க்குள் வழங்க பிரதமர் அலுவலகம் இவ்வாறு செய்ய விரும்புவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இந்த கடிதத்தில் 800Mhz, 900Mhz மற்றும் 1800Mhz அலைக்கற்றைகள் கூடுதலாக இருப்பதை இந்த கடிதம் குறிப்பிட்டு இருக்கிறது. 900Mhz அலைக்கற்றையில் 34Mhz வரையிலான ஸ்பெக்ட்ரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1800Mhz அலைக்கற்றையில் கூடுதலாக 10Mhz ஸ்பெக்ட்ரம் உள்ளது.

DoT requests TRAI to speed 5G spectrum pricing for quicker rollout in India

ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கும் முன் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முடிவு செய்ய வேண்டும். ஏலம் துவங்கும் முன் ஸ்பெக்ட்ரம்களின் கட்டணத்தை குறைத்து நிர்ணயம் செய்ய டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

"ஆகஸ்ட் 15, 2022-க்குள் 5ஜி சேவையை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகளை துவங்கி  பிரதமர் அலுவலகம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தை வலியுறுத்தி இருக்கிறது. இதற்கு தேவையான பரிந்துரைகளை மார்ச் இறுதிக்குள் டிராய் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு ஏற்ப மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்," என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios