ரூ.87,000 பேமெண்ட் பண்ணா ஒத்த ரூபா தான் கேஷ்பேக்கா? கொந்தளித்த க்ரெட் ஆப் பயனர்!
"நான் வங்கி இணையதளம் மூலமாகவே கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றும் அலுவாலியா விரக்தியுடன் கூறியுள்ளார்.
தினமும் பல்வேறு தேவைகளுக்காக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது சகஜமாகிவிட்டது. UPI பேமெண்ட் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமலே வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்த முடிகிறது. இந்த வசதியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால், டிஜிட்டல் பேமெண்ட் அப்ளிகேஷன்களும் பெருகியுள்ளன. அவை போட்டி போட்டுக்கொண்டு கேஷ்பேக் சலுகைகளை அறிவித்து பயனர்களை ஈர்ப்பதும் தொடர்ந்து வெவ்வேறு ஆஃப்ரகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதும் வழக்கம்.
பேமெண்ட் ஆப்களில் வழங்கும் கேஷ்பேக் சலுகை சில நேரங்களில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதிகமாக இருக்கும். பல சமயம் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில் எதுவும் கிடைக்காமலும் போகும்.
UPI மூலம் பணம் பறிக்கும் சைபர் கிரிமினல்ஸ்! பேமெண்ட் செய்யும்போது ஒரு செகண்ட் இதை செக் பண்ணுங்க!
இந்நிலையில், க்ரெட் செயலியில் இந்த கேஷ்பேக் ஆஃபர் ஒரு பயனரை எரிச்சல் அடைய வைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கிரெட் நிறுவனம் தங்கள் அப்ளிகேஷன் மூலம் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தினால் கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவித்து சந்தையில் நுழைந்தத்து. இப்போது க்ரெட் ஆப் நாடு முழுவதும் 1.5 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், குர்ஜோத் அலுவாலியா என்பவர் தனது கிரெடிட் கார்டுக்கு க்ரெட் ஆப் மூலம் ரூ.87,000 பணம் செலுத்தியதாகவும் அதற்கு வெறும் ஒரு ரூபாய் கேஷ்பேக் கிடைத்ததாகவும் கூறியுள்ளது. இது குறித்து அதிருப்தி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
"நான் வங்கி இணையதளம் மூலமாகவே கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றும் விரக்தியுடன் கூறியுள்ளார். அவரது பதிவு வைரலானதை அடுத்து, பலர் தங்களுக்கும் இதேபோல நேர்ந்திருக்கிறது என்று பதிலளித்து வருகின்றனர்.