டெக் பிரியர்கள் எதிர்பார்க்கும் CMF ஹெட்போன் ப்ரோ, 100 மணி நேர பேட்டரி ஆயுள், அடாப்டிவ் ANC மற்றும் LDAC ஆடியோ ஆதரவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது.

டெக் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் CMF ஹெட்போன் ப்ரோ, 100 மணி நேர பேட்டரி ஆயுள், அடாப்டிவ் ANC மற்றும் LDAC ஆடியோ ஆதரவுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது. இது Nothing Phone 1-ஐ விட விலை குறைவாக இருக்கும். CMF வர்த்தகத் தலைவர் ஹிமான்ஷு டாண்டனின் X பதிவின்படி, CMF ஹெட்போன் ப்ரோ இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கிடைக்கும்.

தற்போது ஐரோப்பாவில் விற்கப்படும் இது, அக்டோபர் 7 முதல் அமெரிக்காவில் கிடைக்கும். ஐரோப்பாவில் €100 (சுமார் ரூ.8,900), அமெரிக்காவில் $99 (சுமார் ரூ.8,200) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நத்திங் ஹெட்போன் 1-ஐ விட இதன் விலை ரூ.10,000-க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பிராண்டின் முதல் ஓவர்-இயர் ஹெட்போன். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி இயர்கப்களை மாற்றிக்கொள்ளலாம். கிரே, கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. பாஸ், வால்யூம் கண்ட்ரோலுக்கு பட்டன்கள் உள்ளன. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 40mm டிரைவர்கள், LDAC மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு, அடாப்டிவ் ANC அம்சம் ஆகியவை உள்ளன. ANC ஆஃப் செய்தால் 100 மணிநேரம், ஆன் செய்தால் 50 மணிநேரம் பேட்டரி நீடிக்கும்.