Asianet News TamilAsianet News Tamil

Diwali Offer 2022 என்ற பெயரில் வங்கி விவரங்களைத் திருடும் சீன இணையதளங்கள்: எச்சரிக்கை மக்களே!!

தீபாவளி ஆஃபர் என்ற பெயரில் பல்வேறு இணையதளங்கள் மோசடி செய்வதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மத்திய தொழில்நுட்பத்துறையின் CERT அலுவலகம் எச்சரித்துள்ளது.

Chinese websites stealing personal and bank information from Indian users  by free Diwali gifts scam
Author
First Published Oct 20, 2022, 7:27 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான், பிளிப்கார்ட், ஜியோ மார்ட் என பலவற்றிலும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி சில இணையதளங்கள் மோசடி செய்து வருகிறது. 

Vodofone Idea Diwali Offer: ஜியோவுக்கு போட்டியாக ஆஃபர்களை வாரிவழங்கும் Vi

குறிப்பாக ஒரு சில சீன இணையத்தளங்கள் இலவச தீபாவளி பரிசுகளை வழங்குவதாக பயனர்களுக்கு மோசடி இணைப்புகளை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள், தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கத்துடன் இந்த இணைப்புகள் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை குழு (CERT-In) பயனர்களை எச்சரித்துள்ளது. அதன்படி, “பல்வேறு சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்றவை) பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் பண்டிகை காலச் சலுகை என்று கூறி பரிசுக்கான இணையதள லிங்க் சேர்த்து அனுப்பப்படுகிறது. 

இந்த மோசடி மெசேஜ்கள் பெண்களை குறிவைத்து அனுப்பப்படுகிறது. அதில் பிரபல நடிகர்களின் விளம்பரங்களை இடம்பெறச் செய்து, மற்றவர்களுக்கும் இந்த ஆஃபர்களைப் பகிருங்கள் என்று கேட்கிறது.

Telegram-ல இவ்ளோ வசதி இருக்கா ? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்

இந்த வலைத்தளங்கள் சீன .cn டொமைன்களைக் கொண்டுள்ளது. எனவே, ஃபிஷிங் வலைத்தளங்களில் பெரும்பாலானவை சீனாவைச் சேர்ந்தவை. மற்றவை .xyz மற்றும் .top போன்ற நீட்டிப்புகளைப் பயன்படுத்துகின்றன.  

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற மெசேஜ்களை நம்பி எந்தவொரு இணையதள இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம். முடிந்தவரையில் போலியான மெசேஜ்கள், மோசடி மெசேஜ்களைப் பார்த்தால் டெலிட் செய்திட வேண்டும். மேலும், யாருக்கும் இதபோன்ற மெசேஜ்களை பகிரவும் வேண்டாம் என்று அறிவுறத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு தொழில்நுட்பத்துறையின் CERT-In அலுவலகம் எச்சரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios