Asianet News TamilAsianet News Tamil

ChatGPT App : செம..! சாட் ஜிபிடியின் ஆண்ட்ராய்ட் ஆப் அறிமுகம் - டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம்

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி-யின் ஆண்ட்ராய்ட் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ChatGPT app for Android is now available in India: check details here
Author
First Published Jul 26, 2023, 11:50 AM IST

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி. செயற்கை நுண்ணறிவின் முக்கிய நோக்கமே மனிதர்களின் வேலையை எளிமையாக்குவதும், மனிதர்களை விட மிகவும் துல்லிய தன்மையுடன் தகவல்களை அளிப்பதும்தான். 

இந்த செயல் திறனுக்காகத்தான் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  அதுமட்டுமின்றி இதன் வரவால் கூகுள் தேடு பொறி உட்பட தற்போது பயன்பாட்டில் உள்ள இன்னும் பிற தொழில்நுட்பங்கள் பயன்பாடுகள் காணாமல் போகுமா என்பது குறித்தும் பொதுமக்கள் யோசித்து வருகின்றனர்.

ChatGPT app for Android is now available in India: check details here

இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தற்போது ஆண்ட்ராய்ட் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டுக்கான ChatGPT ஆப் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. எப்படி பதிவிறக்குவது என்பது இங்கே பார்க்கலாம். சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டுள்ளது தொழில்நுட்ப நிறுவனமான OpenAI.

இது அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ChatGPT கிடைப்பதை விரிவுபடுத்தியுள்ளது. இந்த அற்புதமான வளர்ச்சி OpenAI இன் அறிவிப்புக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு வருகிறது. முதலில் சாம் ஆல்ட்மேனின் தலைமையில் முந்தைய ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது.

ChatGPT ஆனது ஏற்கனவே Apple இன் iOS இயங்குதளத்தில் மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான பயனர் அனுபவத்தை பயனர்கள் இதில் பெறலாம் என்று சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது. இந்த செயலியை Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது OpenAI இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios