5G சேவைக்கு தயாராகும் BSNL.. தனியார் நிறுவனத்துடன் கைகோர்ப்பு!
பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி நெட்வொர்க்குகளை அமைப்பதற்காக தனியார் நிறுவனம் எச்செலான் எட்ஜ் உடன் கைகோர்த்து உள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை கொணடு வரப்பட்டது. தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனமும், அதன் பிறகு ஜியோ நிறுவனமும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. தற்போது ஜியோ நிறுவனம் முழுவீச்சில் ட்ரூ 5ஜி நெட்வொர்க் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் வரைக்கும் 5ஜி சேவை வந்தாகிவிட்டது.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறைக்கு கீழ் செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் 5ஜி குறித்து மெளனமாக இருந்து வந்தது. இருப்பினும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பலர் இன்னமுமே மற்ற நெட்வொர்க்களுக்கு மாறாமல் உள்ளனர்.
இந்த நிலையில், தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்து 5ஜி சேவைகளை வழங்கும் முயற்சியில் பிஎஸ்என்எல் களம் இறங்கியுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த மாதம், 50 ரேடியோ யூனிட்களுடன் லைவ் நெட்வொர்க்கில் 4ஜி சேவையில் சோதிக்கத் தொடங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது 5G தொடர்பான மற்றொரு அப்டேட் வந்துள்ளது.
இது தொடர்பாக டெலிகாம்டாக் தளத்தில் வெளியான தகவலின்படி, IT தயாரிப்பு மேம்பாடு மற்றும் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான Echelon Edge உடன் பிஎஸ்என்எல் கூட்டுசேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு 5G நெட்வொர்க்குகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் அரியானா மாநிலம் குர்கானை சேர்ந்தது ஆகும். பிஎஸ்என்எல் ஸ்பெக்டரம் சார்பில் LTE மற்றும் 5ஜி சேவைகளை வழங்குகிறது.
பிரைவேட் 5G நெட்வொர்க்குகள்:
சில நெட்வொர்க்குகளால் மட்டுமே 5G ஸ்பெக்ட்ரத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி பிரைவேட் நெட்வொர்க்குகளை அமைக்க முடியும். கேப்டிவ் நான்-பப்ளிக் நெட்வொர்க் வழங்குநராக (சிஎன்பிஎன்பி) ஒப்பந்தம் ஜனவரி 16 அன்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, எச்செலான் எட்ஜ் தனது வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் உடன் இணைந்து தனியார் நெட்வொர்க்குகளை அமைத்து பராமரிக்க திட்டமிட்டுள்ளது.
Echelon Edge ஆனது விமான போக்குவரத்து, சுரங்கங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மாநிலங்கள் போன்ற தொழில்கள் உட்பட விரிவடைந்து வரும் வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது, மேலும் 5G தனியார் நெட்வொர்க்குகள் அதன் சலுகைகளுக்கு கூடுதலாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
இது குறித்து எக்லான் எட்ஜ் நிறுவனத்தின் செயல் அதிகாரி கூறுகையில், ‘பல்வேறு தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நெட்வொர்க்குகளை அவர்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் பணியாற்றப் போகிறோம். செயல்பாடுகளின் முழு ஆட்டோமேஷனை உறுதிசெய்து, வணிகங்களின் தரவைப் பாதுகாக்கும் நெட்வொர்க் பாதுகாப்பை உறுதிசெய்யுகள்
ChatGPT பயன்படுத்தாதீர்! அமேசான் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!
உயர்தர நெட்வொர்க்கை எங்களால் வழங்க முடியும். BSNL உடனான பார்ட்னர்ஷிப்பில் பல துறைகள் மற்றும் டொமைன்களில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற இணைப்பு மற்றும் 5G தீர்வுகளை வழங்க எங்களுக்கு உதவும்" என்று அவர் கூறினார்
2022 ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஏர்டெல், அதானி, வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை 26 ஜிகாஹெர்ட்ஸ் (எம்எம்வேவ்) பேண்டில் தனியார் நெட்வொர்க்குகளுக்கு ஏற்ற ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளன, அதே நேரத்தில் மத்திய தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கனவே BSNL க்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.