ஒருபுறம் ஏர்டெல், ஜியோ 5ஜி.. மறுபுறம் அலுவலகத்தை வாடகைக்கு விடும் BSNL!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையில் மும்முரமாக இருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் அலுவலக கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும் நிலை அதிகரித்து வருகிறது. 

bsnl offer spaces for rent check list of vacant spaces in tamilnadu

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையில் மும்முரமாக இருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் அலுவலக கட்டிடங்கள் வாடகைக்கு விடப்படும் நிலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருகாலத்தில் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் இருந்து வந்தது. ஜியோ 4ஜி வந்தபிறகு, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு தாவினர். படிப்படியாக பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் மற்ற தனியார் நெட்வொர்க்கு மாறினர். மேலும், ஆட்குறைப்பு, விருப்பு ஓய்வு உள்ளிட்ட காரணங்களினால் 600க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், அலுவலர்கள் பணியில் இருந்து விடைபெற்றனர். இதனால், அந்தந்த இடங்கள் காலியாகவே இருந்தது.  

இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய நெறிமுறைகள்?

மேலும், பிஎஸ்என்எல் அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்கள் வாடகைக்கு விடும் திட்டமும் கொண்டு வரப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் இந்த யோசனை வழிவகுக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு வாடகைக்கு விடத் தொடங்கினர். அரசு அலுவலக கட்டிடமே வாடகைக்கு விடும் நிலை ஏற்பட்டது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், அது பெரிதாக எடுபடவில்லை. இதனிடையே நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் கட்டிடங்களில் காலியிட விவரங்கள் திரட்டப்பட்டு, எந்தெந்த இடங்களில் வாடகைக்கு விடப்படும் என்று பிஎஸ்என்எல் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஏடிஎம் மையம் அமைத்தல், ஊழியர்கள் குடியிருப்பு, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், வங்கிககள் போன்றவை பிஎஸ்என்எல் அலுவலக காலியிடத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அருமையான அப்டேட் !!

தமிழகத்திலும் அரசு நிறுவனங்களுக்கு பிஎஸ்என்எல் கட்டிடம் வாடகைக்கு விடப்படுகிறது. ஆக மொத்தத்தில், பிஎஸ்என்எல் என்ற ஒரு பெரிய சாம்ராஜ்யமே மெல்ல மெல்ல சரிந்துகொண்டிருப்பது கண்கூடாக நிகழ்கிறது. இன்று வரையில் பிஎஸ்என்எல் சேவையில் 4ஜி கூட முழுமை பெறவில்லை. இவ்வாறு 4ஜி சேவை வழங்குவதற்கு மத்திய அரசு ஆர்வமே காட்டவில்லை என்றும், பிஎஸ்என்எல் நஷ்டம் அடைவதற்கு பல்வேறு காரணம் இருந்தாலும், மத்திய அரசு தரப்பில் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கைகள் வைக்கின்றனர்.

பிஎஸ்என்எல் வாடகை திட்ட விவரங்கள்: https://rent.bsnl.co.in/

தமிழ்நாடு பிஎஸ்என்எல் வாடகை திட்ட விவரங்கள்: http://tamilnadu.bsnl.co.in/RentSpace_tn.html

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios