BSNL prepaid : மலிவு விலையில் அட்டகாசமான BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஏர்டெல், ஜியோவுக்குப் போட்டியாக மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

BSNL Latest Action Prepaid Plans check details here

ஜியோ, ஏர்டெல், Vi போன்ற பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக  அரசின் BSNL நிறுவனமும் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்போது புதிதாக இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, ரூ.269 மற்றும் ரூ.769 ஆகிய ரீசார்ஜ் பிளான்கள் வீதம், 30 நாட்கள், 90 நாட்கள் வேலிடிட்டி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் 269 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் உங்கள் பேக் வேலிடிட்டி 30 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதில் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்கிற்கும் அன்லிமிடேட் கால், தினமும் 100 SMS ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

5ஜி சேவையில் இருக்கும் பாதிப்புகள்.. பயனர்கள் கவனத்திற்கு!

இதே போல், 769 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் 90 நாட்கள் வரை உங்கள் பேக் செல்லுபடி ஆகும். இதிலும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா,  100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடேட் கால் ஆகிய வசதிகள் உள்ளன. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு மாதம் ரீசார்ஜ் திட்டம் என்ற பெயரில் வெறும் 26 நாட்கள், 28 நாட்கள் தான் வேலிடிட்டி வழங்குகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய பிளானில் 30 நாட்கள், 60 நாட்கள் வேலிடிட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Asus நிறுவனத்தின் புதிய Zenbook 17 Fold லேப்டாப்.. முன்பதிவு தொடங்கியது!

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, Vi ஆகியவற்றின் 5ஜி சேவை முழுவீச்சில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. BSNL நிறுவனம் அடுத்த ஆண்டு 5ஜி (5G) சேவையைக் கொண்டு வரும் என்று முன்னரே அறிவித்து இருந்தது. அதன்படி வரும் ஆகஸ்ட் 15, 2023 முதல் ஒவ்வொரு கட்டமாக, அதாவது, பேஸ் வாரியாக 5ஜி சேவை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios