பிரபல பிஎஸ்என்ஏல் நிறுவனமானது, தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இ - மெயில் உருவாக்கும் ஆப்பை அரிமு௮கம் செய்துள்ளது

'டேட்டா மெயில்' என்ற ஆப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கி உள்ளது . இந்த ஆப்ஸ் பயன்படுத்தி,  தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' முகவரியை உருவாக்கலாம் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த மெயிலை உருவாக்க, மொபைல் எண் மட்டும் போதும் மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்த ஆப்ஸ்  பயன்படுத்தி,  அவர்கள்  தாய்  மொழியிலேயே மெயில் ஐ டியை  உருவாக்க  முடியும் என்பது  குறிப்பிடத்தக்கது .

இந்த புதிய ஆப்ஸ் தற்போது  குறைந்த எண்ணிக்கையிலேயே  பதிவிறக்கம்  செய்துள்ளனர். ஆனால் இதன் முக்கியத்துவம் அறிந்தால் மக்கள் அதிகம் இதனை பயன்படுத்த தொடங்குவர். இந்த ஆப்ஸ் இல்  குறிப்பாக ரேடியோ என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் ரேடியோ சேனல்' துவக்க முடியும்

 இந்த ரேடியோ சேனலை சமூக  வலைத்தளங்களிலும்  ஒளிப்பரப்பலாம் என்பது  குறிப்பிடத்தக்கது .