போட்டியை சமாளிக்க 4G சேவையில் இறங்கியது BSNL

bsnl announces to launch new 4g services
bsnl announces-to-launch-new-4g-services


இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிருவனங்கள் போட்டியை  சமாளிக்க  சிறப்பு சலுகை  மட்டுமின்றி, அதி நவீன  வேகத்தில்  செயல்படக் கூடிய  இணைய  சேவையான  4G சேவையை  வழங்கி  வருகிறது .இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமானது , இதுவரை 3G சேவையை மட்டும் வழங்கி வந்தது . தற்போது மற்ற தொலைத்தொடர்பு  நிருவனங்களோடு போட்டியை சமாளிக்க,  4G சேவையில்  இறங்கியுள்ளது

அதன்படி, இதற்கு முன்னதாக பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள 2ஜி சேவைக்கு பதிலாக  புதிய  3G,4G சேவையை  வழங்க 28,000  நவீன  டவர்களை வைக்க  உள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த  நடவடிக்கை  அனைத்தும் , பேஸ்-8 விரிவாக்க நடவடிக்கையின் படி  நடைபெற்று  வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது

இதன் காரணமாக  மிக விரைவில், இந்தியாவில்  பிஎஸ்என்எல் நிறுவனம் , 4G சேவையை  வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios