590 கி.மீ. ரேன்ஜ்... 10 நிமிட சார்ஜில் 164 கி.மீ. செல்லும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்.. பி.எம்.டபிள்யூ. அதிரடி!

இந்த மாடலில் 83.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டி விடும்.

BMW i4 with 590Km range launched in India

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட i4 எலெகர்ட்ரிக் செடான் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பி.எம்.டபிள்யூ. i4 மாடல் விலை ரூ. 69 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த கார் முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. 

முந்தைய பி.எம்.டபிள்யூ. மாடலை போன்றே புதிய i4 மாடலும் CLAR ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 83.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரில் உள்ள மோட்டார் 340 ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டி விடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 190 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

பாஸ்ட் சார்ஜிங்:

பி.எம்.டபிள்யூ. i4 மாடலுடன் 205 கிலோவாட் திறன் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு காரை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 164 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்யூ. i4 மாடல் ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட M50 X டிரைவ் வேரியண்டிலும் கிடைக்கிறது. இந்த கார் 544 ஹெச்.பி. திறன், 795 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 510 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டு இருக்கிறது.

BMW i4 with 590Km range launched in India

ரேன்ஜ்:

புதிய பி.எம்.டபிள்யூ. i4 மாடலை வழக்கமாக வழங்கப்படும் 11 கிலோவாட் வால் பாக்ஸ் சார்ஜருடனும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சார்ஜர் காரை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 8.5 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த காரில் ரி ஜெனரேடிவ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் புதிய பி.எம்.டபிள்யூ. i4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

வேரியண்ட்கள்:

இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. i4 மாடல் இ டிரைவ் 40 எனும் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதில் ஏராளமான சவுகரிய மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கேபின் தோற்றம் வழக்கமான 4 சீரிஸ் கூப் மாடலில் உள்ளதை போன்றே காட்சி அளிக்கிறது. இதில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 14.9 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பி.எம்.டபிள்யூ. ஐ டிரைவ் 8 யு.ஐ.  கொண்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios